ஒரே நேரத்தில் சீனா-வடகொரியாவுக்கு குறிவைத்த அமெரிக்கா..!! மொத்த ஜாதகத்தையும் அலசுகிறது சிஐஏ..!!
வெறும் 32 வயதேயான கிம் யோ ஜாங் தன்னை விட பல மூத்த அதிகாரிகளை ஓரம்கட்டிவிட்டு எப்படி அரசியலில் முன்னேறினார் என்பது குறித்தும் தகவல் திரட்டிவருவதாக அவர் தெரிவித்துள்ளார் .
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்பது பற்றி இதுவரை எந்த தெளிவான தகவல்களும் கிடைக்காத நிலையில் அவரது சகோதரியும் ஆளுங்கட்சியின் மூத்த அதிகாரியுமான கிம் யோ ஜாங் குறித்து அமெரிக்க உளவுப் பிரிவு தகவல்களை தீவிரமாக சேகரித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளன . அமெரிக்கா , அதன் கூட்டாளி தென் கொரியா போன்ற நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், சர்வாதிகாரி எனவும் பெயர் எடுத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பின்னர் தலைமறைவாகியுள்ளார் . இந்நிலையில் அவர் எங்கே போனார் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து பல்வேறு முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியாகி வருகின்றன , இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சிஎன்என் உள்ளிட்ட சில செய்தி நிறுவனங்கள் , கிம் ஜாங் உன்னுக்கு திடீர் என ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து அவர் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என அதிர்ச்சித் தகவல் வெளியிட்டது .
இதனை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதே தகவலை தெரிவித்தார் , இதனையடுத்து சீனா தென் கொரியா போன்ற நாடுகள் இந்தத் தகவலை மறுத்ததுடன் கிம் நலமாக உள்ளார் என சில ஆதாரங்களை வெளியிட்டன, ஆனாலும் இதுவரை வடகொரியா கிம் தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை . இதனால் கிம் பற்றி வெளியாகும் அத்தனை தகவல்களும் யூகத்தின் அடிப்படையிலானதே தவிர அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் இதற்கிடையில் அமெரிக்கா தென்கொரியா போன்ற நாடுகள் கிம் தொடர்பான தகவலை சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தாங்கள் வடகொரியாவை உன்னிப்பாக கவனித்து வருவதாக சூசகமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் உளவு பிரிவான சிஐஏ மற்றும் புலனாய்வு அமைப்பில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி ஒய்வு பெற்ற புரூஸ் கிளிங்கர் நிக்கி , தெரிவித்ததாவது,
அதிபர் கிம் ஜாங் உன் பற்றி இன்னும் பல்வேறு சந்தேகங்கள் நீடித்து வரும் நிலையில் , கிம் குடும்பத்தின் கோப்புகளை சேகரிப்பதற்கான வேலைகளில் சிஐஏ இறங்கியுள்ளது . குறிப்பாக கிம்முக்கு அடுத்த நிலையில் அதிகார வட்டத்திலுள்ள அவரது சகோதரி "கிம் யோ ஜாங்" குறித்த தகவலையும் திரட்டும் பணி சிஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் . குறிப்பாக ஒரு நாட்டின் புலனாய்வு பணியில் ஈடுபடும் சிஐஏ அந்நாட்டின் பொதுவான அரசியலை மதிப்பிடுவது மட்டுமல்லாது நாட்டின் தலைவர்கள் குறித்து தகவல்களை சேகரிப்பதிலும் , அவர்களை மதிப்பீடு செய்வதிலும் கவனம் செலுத்துகிறது என கிளிங்கர் தெரிவித்துள்ளார் . குறிப்பாக பகுப்பாய்வு செய்யப்பட தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் அதன் வரலாறு , நடைமுறையில் உள்ள போதைப்பொருள் பழக்கவழக்கம் . மக்களின் மனோபாவம் . தன்னம்பிக்கை மற்றும் உற்சாகமான நடவடிக்கைகளுக்கான போக்கு போன்றவை பற்றி பகுப்பாய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார் .
அந்த அடிப்படையில் தற்போது வடகொரியா முழுவதையும் பகுப்பாய்வு செய்வதில் சிஐஏ களமிறங்கியுள்ளது , இந்நிலையில் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த நிலையிலுள்ள அவரது சகோதரி வட கொரியாவில் எவ்வளவு செல்வாக்கு நிறைந்தவராக உள்ளார் . அதிகாரிகள் அவருக்கு எந்த அளவிற்கு ஒத்து உழைக்கின்றனர் அதிகார பீடத்தில் அவருடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது , அவருக்கு ஆதரவு எதிர்ப்பு மனப்பான்மை என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும், கடந்த 2018இல் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் கிம் யோ ஜாங் பார்வையிட வந்திருந்தது முதல் அவரை அமெரிக்க புலனாய்வு கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார் .வெறும் 32 வயதேயான கிம் யோ ஜாங் தன்னை விட பல மூத்த அதிகாரிகளை ஓரம்கட்டிவிட்டு எப்படி அரசியலில் முன்னேறினார் என்பது குறித்தும் தகவல் திரட்டிவருவதாக அவர் தெரிவித்துள்ளார் .
பொதுவாக ரஷ்யாவிலிருந்து தகவல்கள் திரட்டுவது சிஐஏ போன்ற உளவு அமைப்புக்கு மிக சவாலாக இருந்தவரும் நிலையில் , வட கொரியாவில் இருந்து தகவல்களைத் திரட்டுவது அதைவிட பன் மடங்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என பல முன்னாள் உளவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் . மிக கடுமையான கட்டுப்பாடுகள் அங்கு இருப்பதே அதற்கு காரணம், கொரோனா வைரஸ் தொடர்பாக ஒருபுறம் அமெரிக்க உளவு பிரிவு சீனா குறித்து விசாரித்து வரும் நிலையில் தற்போது வட கொரியாவிலும் அமெரிக்க உளவுப் பிரிவு களமிறங்கி இருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.