சீனாவுக்கு மொத்தமாக ஆப்பு வைக்க சட்ட மசோதா..!! அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிரடி..!!!
உலக அளவில் நிலவிவரும் பொருளாதார நிச்சயமற்ற இந்நேரத்தில் உலக நாடுகள் பலவும் தங்களது நிறுவனங்களை இடப்பெயர்வு செய்வதன்மூலம் வியாபார ரீதியாக ஆபத்தை சந்திக்க நேரிடுமோ என அஞ்சுகின்றன.
அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி அலகுகளை சீனாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு திரும்பப் பெற உதவும் வகையில் மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இது வளர்ந்துவரும் சீனப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தவும் அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் என அம்மசோதாவை தாக்கல் செய்துள்ள அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் மார்க் கிரீன் வலியுறுத்தியுள்ளார். உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவை கொரோனா வைரஸ் நிலைகுலையச் செய்துள்ளது . இதுவரையில் அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 71 ஆயிரமாக உயர்ந்துள்ளது . இதுவரை அங்கு சுமார் 93 ஆயிரத்து 558 பேர் உயிரிழந்துள்ளனர் . இது அமெரிக்காவில் வரலாறு காணாத பேரிழப்பாக கருதப்படுகிறது .
அதேபோல் நாட்டின் பொருளாதாரமும் அதள பாதாளத்திற்கு சரிந்துள்ள நிலையில் தன் முழு கோபத்தையும் சீனா மீது வெளிப்படுத்தி வரும் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளது . அமெரிக்கா மட்டுமின்றி இத்தாலி, பிரான்ஸ் , ஸ்பெயின் , பிரிட்டன் உள்ளிட்ட ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டு நிறுவனங்களை திரும்பப் அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் மார்க் கிரீன் " பிரிங் அமெரிக்கன் கம்பெனி ஹோம் ஹாக்ட் " என்ற புதிய சட்ட மசோதா ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் . அதில் அமெரிக்க பொருளாதாரத்தை வலுவாக மாற்ற அமெரிக்கா அதிக முதலீட்டை ஈர்ப்பது அவசியம் , அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து இடம்பெயர்வதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது செலவுதான் . மேலும் உலக அளவில் நிலவிவரும் பொருளாதார நிச்சயமற்ற இந்நேரத்தில் உலக நாடுகள் பலவும் தங்களது நிறுவனங்களை இடப்பெயர்வு செய்வதன்மூலம் வியாபார ரீதியாக ஆபத்தை சந்திக்க நேரிடுமோ என அஞ்சுகின்றன.
அமெரிக்க நிறுவனங்களுக்கும் இதே அச்சம் உள்ளது. ஆனால் சீனா அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நண்பன் அல்ல , இனியும் நாம் சீனாவை வர்த்தகத்திற்காக நம்பி இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் , உள்நாட்டிலேயே முதலீட்டை ஊக்குவிப்போம் என மார்க் கிரீம் அம்மசோதாவில் வலியுறுத்தியுள்ளார் . மேலும் தான் கொண்டுவரும் மசோதா அமெரிக்காவின் பொருளாதார மேம்பாட்டுக்கானது , இப்போதைய சூழ்நிலையில் நம் நிறுவனங்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் , எனவே அமெரிக்க நிறுவனங்கள் இடம்பெயர்வதற்கான செலவுகளுக்காக ஊக்கத்தொகை நாம் அளிப்போம் , என அவர் வலியுறுத்தியுள்ளார் . அதேநேரத்தில் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மிகப்பெரிய பயங்கரவாதத்தை ஏற்படுத்தியுள்ளது இதில் ஏராளமான அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் . சீனாவின் அலட்சியமான போக்கு ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறப்பதற்கு காரணமாக அமைந்துவிட்டது . ஆரம்பித்திலேயே இந்நோயின் தீவிரம் குறித்தும் உலக நாடுகளுக்கு அறிவிக்க சீனா தவறிவிட்டது என அவர் காட்டமாக சீனாவை குறை கூறினார்.