Asianet News TamilAsianet News Tamil

குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா படையெடுக்கும் சீன பெண்கள்...!! அப்படி என்னதான் ரகசியம் இருக்கு அங்க...!!

இதனால் இதை கட்டுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது .  அமெரிக்கா விசா பெறுவதில் சீனப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் அவர்களே அதிகளவில் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளவதாகவும் தெரியவந்துள்ளது.  

america restrict for maternity visa most of chine girls going to america for this purpose only
Author
Delhi, First Published Jan 25, 2020, 2:22 PM IST

குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு தற்காலிக விசா வழங்க அந்நாடு அரசு தடை விதித்துள்ளது .  அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த அதிரடி  நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார் . ட்ரம்ப்  அதிபராக பொறுப்பேற்றது  முதல் அந்நாட்டின் பொருளாதாரம் , மற்றும்  அந்நாட்டு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது  போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் .  அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பல அதிரடி நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்ததின் மூலம்  பணி நிமித்தமாக அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்நிலையில் அமெரிக்காவுக்கு  வருபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விசா விவகாரத்திலும்  அந்நாடு கண்டிப்புகாட்ட தெடங்கியுள்ளது. 

america restrict for maternity visa most of chine girls going to america for this purpose only  

அதாவது அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் வகையில் அந்நாட்டு அரசியல் சாசனம் வழிவகை செய்துள்ளது .  இதற்காகவே பல கர்ப்பிணி பெண்கள் தற்காலிக விசா மூலம் அமெரிக்கா சென்று அங்கு குழந்தை பெற்றுக்  கொள்கின்றனர்.  இதனால் அவர்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதனால் அவ்வாறு செய்கின்றனர் .  இதனால் கடந்த 2016 - 2017 ஆம் ஆண்டில் 33 ஆயிரம் குழந்தைகள் தற்காலிக விசாவில் பிறந்துள்ளன எனவே ,  அமெரிக்காவில் பிரசவ விசாவை பெற்றுத்தர ஒரு பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற வகையில் இதை ஒரு வணிகமாகவே  சில கும்பல்கள் செயல்படுத்தி வருவதாக அமெரிக்க அரசுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் இதை கட்டுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது .  அமெரிக்கா விசா பெறுவதில் சீனப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் அவர்களே அதிகளவில் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளவதாகவும் தெரியவந்துள்ளது.

america restrict for maternity visa most of chine girls going to america for this purpose only 

இந்நிலையில் இதை தடுக்க முடிவு செய்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை  தானாக கிடைப்பதற்காக பலர் தற்காலிக விசாவில் அமெரிக்கா வந்து குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் .  அமெரிக்க குடியுரிமையின் நேர்மை பாதுகாக்கப்பட வேண்டும் ,  இதனால்  பி1 ,  பி2 தற்காலிக விசாக்கள் குழந்தை பெறும் நோக்கில் அமெரிக்கா வரும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படமாட்டாது . பிரசவத்துக்காக  வரும் பெண்களால் அமெரிக்க மருத்துவமனைகளுக்கு  பெரும் சுமையாகவும் அச்சுறுத்தலாக உள்ளது .  இதனால் அமெரிக்கா வரிப்பணம் தவறாக சுரண்டப்படுகிறது .  எனவே அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது .  எனவே தற்காலிக விசா கேட்டு விண்ணப்பிக்கும் பெண்களிடம் கர்ப்பமாக இருக்கிறீர்களா ,  அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா என கேட்டு விசா வழங்கும் படி அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios