தடுப்பூசி வருவதற்குள் கொரோனா தன்னால் போய்விடும்..!! அதிபர் ட்ரம்ப் அதிரடி கருத்து..!!

அமெரிக்காவில் இந்த வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள  வேலையில்லா திண்டாட்டம் திகிலூட்டுவதாகவும்  தற்போது வேலையின்மை 14.7 சதவீதமாக உயர்ந்துள்ளது , என்றும் கூறியுள்ளார். 

america president trump says corona will go before vaccine

கொரோனா வைரஸ் ,  தடுப்பூசி இல்லாமலேயே மக்களைவிட்டு   நீங்கிப் போய்விடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார் , அதே நேரத்தில் அமெரிக்காவில் சுமார் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பார்கள் எனவும்  அவர் தெரிவித்துள்ளார் , துணை ஜனாதிபதி மைக் பென்சின் பத்திரிக்கை செயலாளருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.  உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் கபளீகரம் செய்து வருகிறது ,  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,   இதுவரை அமெரிக்காவில் கொரோனா  தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியுள்ளது . 

america president trump says corona will go before vaccine

இதுவரை சுமார் 78 ஆயிரம் பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.  உலகில் ஏற்பட்டுள்ள மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இன்னும்கூட அமெரிக்காவில்  இந்த வைரஸின் கோரத்தாண்டவம் ஓய்ந்தபாடில்லை, இதை கட்டுபடுத்த எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் பரவலை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை , அதே போல் தொடர் ஊடரங்கால் மறுபுறம் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதுவரை அங்கு 2 கோடி பேர் வேலை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் , இந்நிலையில்  குடியரசு கட்சியின் சட்டமியற்றும் உறுப்பினர்களுடனான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர் ட்ரம்ப் , அமெரிக்காவில் இந்த வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள  வேலையில்லா திண்டாட்டம் திகிலூட்டுவதாகவும்  தற்போது வேலையின்மை 14.7 சதவீதமாக உயர்ந்துள்ளது , என்றும் கூறியுள்ளார்.

  america president trump says corona will go before vaccine

பிப்ரவரியில் இது 3.5 சதவீதமாக இருந்தது என்றும் ஏப்ரல் மாதத்தில் சுமார் 20 மில்லியன் மக்கள் வேலை இழந்துள்ளனர் . எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்,   தற்போது இந்த வைரஸ் வெள்ளை மாளிகையிலும் நுழைந்துள்ளது துணை ஜனாதிபதி மைக் பென்சின் பத்திரிக்கை செயலாளர் கேட்டி மில்லருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  எனக் கூறினார் . கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் அதாவது 24 மணி நேரத்தில் 29 ஆயிரம்  புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளது.  இந்நிலையில் 95 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் உயிரிழக்கக் கூடும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார் . அதே நேரத்தில் புதிய தடுப்பூசி வருவதற்குள் வைரஸ்  தன்னால் போய்விடும் என ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையில்  வைரஸ் தொற்று தொடர்பான தவறான கதைகளை பரப்புவதற்கு சீனாவும் ரஷ்யாவும் கைக்கோர்த்துள்ளதாகவும்  அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios