அமெரிக்காவிற்கு எதிராக அதன் எதிரிகள் கொரோனா வைரசை ஒரு பயோ வெப்பனாக (போர் ஆயுதமாக) பயன்படுத்தி இருக்கக் கூடுமென உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக அமெரிக்காவின் செய்தி நாளேடான பொலிட்டிகோ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது . தற்போது இந்த செய்தி அமெரிக்காவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கொரோனா உலகளவில் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரையில் எந்த நாடும் பாதிக்காத அளவிற்கு அமெரிக்காவையே இது அதிகமாக பாதித்துள்ளது .  அமெரிக்காவில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  50 ஆயிரத்தை கடந்துள்ளது .  இந்த வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹானில்  தோன்றியது என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்கா சீனா மீது  சந்தேகக் கணைகளைத் தொடுத்து வருகிறது .  சீனாதான் இந்த வைரஸை தனது ஆய்வு கூடத்தில் தயாரித்து அதை  தெரிந்தோ தெரியாமலோ கட்சிவிட்டிருக்க முடியுமென அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். 

ஆனால் சீனா அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது ,  இது கடந்த சில வாரங்களாக அமெரிக்கா சீனா இடையே வார்த்தை போராகவே மாறியுள்ளது .  இந்நிலையில் இந்த வைரஸ் எங்கு உருவானது அது எப்படிப்பட்டது என்பது குறித்து பல்வேறு உலக நாடுகள் வைரஸை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.  இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பொலிட்டிகோ என்ற செய்தி நிறுவனம் ,  அமெரிக்காவுக்கு எதிராக அதன் எதிரிகள் இந்த வைரசை பயோ வெப்பனிகா பயன்படுத்தி இருக்கக் கூடுமென சில பெயர் குறிப்பிடப்படாத  உளவுத்துறை அதிகாரிகள் தங்களுக்கு தெரிவித்ததாகக் கூறி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது ,  அதாவது தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அமெரிக்காவின் எதிரிகள் கொரோனாவை பயோவெப்பனாக உபயோகிப்பதற்கான  சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருக்கிறது ,  தற்போது உளவுத்துறை அதிகாரிகள் அதை ஆராய்ந்து வருகின்றனர், அமெரிக்க பாதுகாப்பு துறையும் இதை உண்ணிப்பாக கண்காணித்து வருகிறது இது முக்கிய உயர்மட்ட இலக்குகளுக்கு எதிராக குறிவைக்கப்பட்டிருக்கலாம்  என சில பெயர் குறிப்பிடப்படாத உளவுத்துறை அதிகாரிகள் தங்களுக்கு தெரிவித்ததாக அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது

இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கேணல் மைக் ஆண்ட்ரூஸ் இடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டதற்கு அவர் இது குறித்து பதில் ஏதும் கூற மறுத்துவிட்டார் .  அதே நேரத்தில் இந்த வைரஸின் வேதியியல் மற்றும் உயிரியல் ,  மற்றம் பாதுகாப்பு திட்டம் ,  சோதனைகள் மற்றும்  தடுப்பூசி ,  வைரஸை கண்காணித்தல் போன்றவற்றில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார் .  இந்நிலையில்  வைரஸை கண்டறிந்து அதை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 150 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .  அதே நேரத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பென்டகன் முன்னாள் மூத்த அதிகாரிகள் சிலர் பாதுகாப்பு அதிகாரிகள் அச்சுறுத்தலை பெற்றிருக்கிறார்களா என்பது தெளிவாக தெரியவில்லை மேலும் இதை ஆராய்ந்து ஒருங்கிணைந்து திட்டமிட்டு அதை ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளனர்

 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அணு வேதியியல் மற்றும் உயிரியல் பாதுகாப்பு திட்டத்தின் பாதுகாப்பு உதவி செயலாளராக பணியாற்றிய ஆண்டி வெபர் ,  தற்போது உள்ள நிலையில் ஒரு அதிநவீன குழுவால்  வைரஸ் எளிதாக உபயோகிக்க முடியும், அல்லது மிகவும் மேம்பட்ட உயிரியல் ஆயுத திட்டத்தை கொண்ட ஒரு தேசிய அரசுக்கு , ஒரு வைரசை  மேம்பட்ட பண்புகளை கொடுத்து அதை பரப்பமுடியும் என அவர் தெரிவித்துள்ளார், ஒரு மோசமான எண்ணம் கொண்ட நபரால் நிச்சயம் இதை செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.