கொரோனாவை ஒழிக்க அமெரிக்கா கண்டிபிடித்த தடுப்பூசி..!! 45 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை தொடங்கியது..!!
அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் செயல்படும் கேம்பிரிட்ஜில் ஆராய்ச்சி நிலையம் கேம்பிரிட்ஜில் மாடர்னா என்ற உயிரி தொழில்நுட்பம் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரசுக்கு மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி உருவாக்கப்பட்டு மனிதர்கள் மீதான அதன் பரிசோதனை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் , அமெரிக்காவின் இந்த கண்டுபிடிப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது . இதுவரை உலக அளவில் சுமார் 7,200 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . ஒரு லட்சத்தி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்கம் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்த வைரசால் சீனாவில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .
இந்த வைரஸ் அமெரிக்கா , ஜப்பான் , தென் கொரியா , ஈரான் , இத்தாலி , உள்ளிட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது . இந்நிலையில் இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் அமெரிக்காவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக அமெரிக்கா கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்கியுள்ளது, மனிதர்கள் மீதான அதன் பரிசோதனையை தற்போது அது தொடங்கியுள்ளது . எனவே கொரோனாவுக்கு எதிராக உலகமே போராடிவரும் நிலையில் இது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசை முறியடிக்க அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்து இதுவரையில் எதுவும் இல்லை . என்பதால், அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் செயல்படும் கேம்பிரிட்ஜில் ஆராய்ச்சி நிலையம் கேம்பிரிட்ஜில் மாடர்னா என்ற உயிரி தொழில்நுட்பம் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.
அதேபோல் நார்வே நாட்டை சேர்ந்த சி.இ.பி.ஐ என்ற நிறுவனம் இதற்கான நிதியுதவி வழங்கியுள்ளது . இந்நிலையில் 1273 எனக் குறிப்பிடப்படும் இந்த தடுப்பூசி மருந்தின் சக்தி , கொரோனா வைரசை முறியடிக்கும் திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான மனிதர்கள் மீதான பரிசோதனை தொடங்கியுள்ளது . தாங்களாகவே முன்வந்து 18 முதல் 55 வயது நிரம்பிய ஆரோக்கியமான 45 பேரை தேர்வு செய்து ஆறு வாரங்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது . சியாட் நகரில் நடைபெற்று வரும் இந்தப் பரிசோதனை திட்டத்தில் பங்கேற்றவர்களில் முதலில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது, முதற்கட்ட பரிசோதனை என்பது சாதனை வேகத்தில் தொடங்கியுள்ளதாகவும் , விரைவில் தடுப்பூசி மருந்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதே தங்களின் நோக்கம் எனவும் அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது . மனிதர்கள் மீதான கொரொனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கி விட்டாலும் பாதுகாப்பானது தான் என உறுதிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என குறிப்பிடப்பட்டது .