இது என்ன அமெரிக்காவுக்கு வந்த படுமோசமான சோதனை..!! உலக அளவில் நடக்கப் போகும் பெருந்துயரம்.??

வைரஸ் உச்சக்கட்டத்தை எட்டும் போது நாளொன்றுக்கு 3,130 பேர் இறப்பர் ,  ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 81, 766 ஆக உயரும் என்றும் ,எச்சரிக்கப்பட்டுள்ளது

america have in danger zone and scientific prediction also alert america next 10 days

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உச்சத்தை எட்டும்போது நாளொன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழக்க வாய்ப்புள்ளது என வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது . இதுவரையில் உலக அளவில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது .  இத்தாலி , ஸ்பெயின் , ஈரான் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இந்நிலையில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு  கொரோனா வைரஸ் இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது . இதனால் கொரோனா வைரஸின் மையம் என அமெரிக்காவை தற்போது உலக நாடுகள் உச்சரித்து வருகின்றன. 

america have in danger zone and scientific prediction also alert america next 10 days

இந்நிலையில் அமெரிக்காவில்  வைரஸின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது .  இது அமெரிக்க மக்களை மிகுந்த கலக்கமடைய செய்துள்ளது .  இது குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வரைபடம் ,  அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்று நோயின் உச்சநிலையை அடைய இன்னும் 10 நாட்கள் உள்ளது என தெரிவித்துள்ளது.  கிட்டத்தட்ட உச்ச நிலையை அடையும்போது நாளொன்றுக்கு 3,130 அமெரிக்கர்கள் இறப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது .  அதாவது வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள வரைபடங்கள் ஒரு மாநிலத்தின் இறப்புகளின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என்று கணித்துள்ளது.  மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் தேவை அதிகரிக்க வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.

america have in danger zone and scientific prediction also alert america next 10 days 

தற்போது நியூயார்க்கில் வைரஸ் உச்சநிலையை நெருங்கிள்ளது , வரும் வியாழக்கிழமை இது உச்சமாக இருக்கும்  என்று கணிக்கப்பட்டுள்ளது.  உச்சத்தை அடையும் அன்று  878 பேர் இறக்கக்கூடும் , அதேபோல மருத்துவ  உபகரணங்களுக்கான தேவையும் அதிகமாக இருக்கும் ,  கிட்டத்தட்ட 12,500 மருத்துவமனை படுக்கைகள் குறைவாக உள்ளதாகவும்.  கார்டன் மாநிலத்திலும் படுக்கைகள் அதிகம் தேவைப்படும் என்றும், அங்கு 16 ஆயிரத்து 800க்கும் அதிகமான படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது என்றும்  எச்சரித்துள்ளது.  வைரஸ் உச்சக்கட்டத்தை எட்டும் போது நாளொன்றுக்கு 3,130 பேர் இறப்பர் ,  ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 81, 766 ஆக உயரும் என்றும் , அமெரிக்கா முழுவதும் 36, 500க்கும் மேற்பட்ட மருத்துவமனை படுக்கைகள் அவசியம் என்றும், சுமார்  16, 300க்கும் அதிகமான ( ICU)அவரச சிகிச்சை பிரிவுகள்  தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் மேலும் சமூக தொலைதூர நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டால் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது .

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios