உலகநாடுகளிடம் கையேந்தும் பாக் பிரதமர் இம்ரான் கான்..!! 8.4 மில்லியன் டாலரை அள்ளி கொடுத்த அமெரிக்கா.
பாகிஸ்தானில் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இது பயன்படும் என நம்புகிறோம், இது அமெரிக்க மக்கள் சார்பாக வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார் .
உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் , அதை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு சுமார் 8.4 மில்லியன் டாலர் நிதியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது . பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பால் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை மாலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் , இங்கு ஏராளமான மக்கள் வறுமையில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் பாகிஸ்தானுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமெரிக்கா இந்த நிதியை வழங்குகிறது . கொரோனா எதிரொலியாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு இந்த நிதி உதவும் , பாகிஸ்தானில் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இது பயன்படும் என நம்புகிறோம், இது அமெரிக்க மக்கள் சார்பாக வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான் நாளேடு, பாகிஸ்தானில் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் ஆய்வகங்கள் அமைக்கவும் , மருத்துவக் உபகரணங்கள் வாங்கவும், கொரோனா சோதனை மற்றும் கண்காணிப்பு திறனை மேம்படுத்தவும் நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்லாமல் வீடுகளில் அடைந்துள்ள மக்களுக்கு நேரடியான வீடுகளுக்கே சென்று பரிசோதனைகள் நடத்துவது , மற்றும் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட தேவைகளுக்காக இது பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன்மூலம் மருத்துவர்களின் பணி சுமை பாதியாக குறைக்கப்படும் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது . பாகிஸ்தானில் இதுவரை 7 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது . பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதையடுத்து அங்கு பொருளாதாரம் மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே நாடு சந்தித்து வரும் பொருளாதார பிரச்சினையை சமாளிக்க அயல்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள் மனமுவந்து நிதி வழங்க வேண்டும் . நாட்டின் செல்வந்தர்கள் தொழிலதிபர்கள் நிதி வழங்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அமெரிக்கா இந்த நிதியுதவி வழங்கியுள்ளது . அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி முற்றிலுமாக தடைபட்டுள்ளது. என அவர் கவலை தெரிவித்து வருகிறார் . இந்நிலையில் பாகிஸ்தான் சந்தித்து வரும் பொருளாதார தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா 8.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முன்வந்திருப்பது பாகிஸ்தானுக்கு பேருதவியாக மாறியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் மீது ஆண்டாண்டு காலமாக ஒரு பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது , அதாவது பாகிஸ்தானில் உள்ள ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அம்மக்களின் சுகாதார கட்டமைப்புகாக்கவும் சர்வதேச நிதியம் ,உலக சுகாதார நிறுவனம் மற்றும் அரபு நாடுகள் வழங்கும் நிதியை அது பெருமளவில் தீவிரவாதத்திற்கு பயன்படுத்துகிறது என குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது .