சீனாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளை அணி திரட்டும் அமெரிக்கா..!! இராஜதந்திரத்தை கையாளும் இந்தியா..!!

இந்தியா,  அமெரிக்கா - சீனா விவகாரத்தில் இராஜதந்திர அணுகுமுறைகளை பேணி வருகிறது 

america discussion with friendly wood country's renegading after corona development

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கொரோனா விவகாரத்தில் மோதல் நீடித்து  வரும் நிலையில் , கொரோனா வைரசுக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது மற்றும்  சீனாவை சார்ந்திருப்பதை இனி எப்படி குறைத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து  இந்தியா ஆஸ்திரேலியா ஜப்பான் உள்ளிட்ட ஏழு நாடுகளுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பியோ ஆலோசனை நடத்தி உள்ளனார் .  அதாவது கொரோனா வைரஸ்  அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை மிக மோசமாக பாதித்துள்ள நிலையில் ,   சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும்  இடையே மோதல் நீடித்து வருகிறது, இந்நிலையில்  இனி பல்வேறு விஷயங்களுக்கு சீனாவை சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா முடிவு செய்துள்ளது .  இதனால் அதன் நட்பு நாடுகளுடன் அது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் , 

america discussion with friendly wood country's renegading after corona development 

அதன் நட்பு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மேக் பாம்பியோ ஆலோசனையில் ஈடுபட்டார் ,   ஆஸ்திரேலியாவின் மரைஸ் பெய்ன், இஸ்ரேலின் இஸ்ரேல் காட்ஸ், ஜப்பானின் டாரோ கோனோ, பிரேசிலின் எர்னஸ்டோ அராஜோ மற்றும் தென் கொரியாவின் காங் கியுங்-வா ஆகியோர்  வீடியோ கான்பரன்ஸின் ஒரு பகுதியாக கலந்துகொண்டனர் , அதில் இந்தியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பங்கு பெற்றனர் .  இதில் இடம் பெற்ற பல நாடுகள்  சீனாவுடன் நெருக்கமான வர்த்தக மற்றும் வணிக தொடர்புகளைக் மேற் கொண்டு வருகின்றன. மேற்கண்ட நாடுகளுடன் ஆலோசனை நடத்திய மைக் பாம்பியோ சர்வதேச ஒத்துழைப்பு வெளிப்படைத்தன்மை பொறுப்புடைமை ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. எதிர்கால சுகாதார பிரச்சினைகளை தடுப்பதில் ஒத்துழைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார் .

america discussion with friendly wood country's renegading after corona development

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது இந்தியா,  அமெரிக்கா - சீனா விவகாரத்தில் இராஜதந்திர அணுகுமுறைகளை பேணி வருகிறது .  இது சீனா என்ற ஒரு நாட்டை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட ஆலோசனை அல்ல,  கொரோனா வைரஸ் தொடர்பாகவும் உலகளாவிய சுகாதார மேலாண்மை ,  மருத்துவ ஒத்துழைப்பு ,  பொருளாதார மீட்பு மற்றும் பயண விதிமுறைகளை தளர்த்துவது உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது என்று தெரிவித்துள்ளார் .  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கடந்த ஏப்ரல் 29 அன்று  இந்த வீடியோ கான்பரன்சிங் குறித்து குறிப்பிட்டபோது ஆஸ்திரேலியா இந்தியா ஜப்பான் தென் கொரியா நியூசிலாந்து மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுடன் உலகப் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தும் மறுசீரமைப்பு வினியோகத்தை ஆராயவும் அமெரிக்க அரசு முயன்று  வருவதாக கூறியிருந்தது குறிப்பிடதக்கது  மேலும் சில ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் இந்த  இனு வரும் கலந்துரையாடல்களில்  சேரக்கூடும் என்றும் சர்வதேச அரசியில் நோக்ககர்கள்  தெரிவிக்கின்றனர். 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios