சீனாவை அடிமேல் அடிஅடிக்கும் அமெரிக்கா..!! ஜிஜின் பிங்குக்கு எதிராக இந்தியாவை கொம்பு சீவும் ராஜதந்திரம்..!!
சீனா பதுக்கியாதால் இந்தியா போன்ற நாடுகளில் அப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா 18 மடங்கு அளவிற்கு அதிகமான முகமூடிகளை கொள்முதல் செய்துள்ளது எனவும், சீன அரசாங்கத்தின் சுங்கவரி சங்கத்தில் இருந்து நேரடியாக தரப்பட்ட ஆதாரங்கள் தன்னிடத்தில் உள்ளன எனவும் நவரோ கூறியுள்ளார் .
சீனா அதிக அளவிலான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் , கையுறைகள், உடற் கவசங்கள் ஆகியவற்றை அதிக அளவில் பதுக்கி வைத்துள்ளதுடன் அதை பிற நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார் . சீனாவின் இதுபோன்ற முறைகேடுகளுக்கு தங்களிடம் உரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை இயக்குனர் பீட்டர் நவரோதான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , உலக அளவில் 20 லட்சத்து 48 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஒரு லட்சத்தி 70 ஆயிரம் பேர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர் . அமெரிக்கா , இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் , ஜெர்மனி , பிரிட்டன் துருக்கி , ஈரான் உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .
இந்நிலையில் இந்தியா பிரேசில் உள்ளிட்ட நாடுகள் பொதுமான அளவுக்கு கையுறைகள் , முகக் கவசங்கள் உடற் காவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகாரணங்கள் , இன்றி கடுமையான தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வருகின்றன. அமெரிக்காவிலும் இதே போன்ற தட்டுப்பாடு நிலவுகிறது . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க தொழில் மற்றும் வர்த்தகத் துறை இயக்குனர் பீட்டர் நவரோ சீனாவில் ஏராளமான மருத்துவ உபகரணம் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் பின்னர் அவை அதிக விலைக்கு பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது வருகிறது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனா பதுக்கியாதால் இந்தியா போன்ற நாடுகளில் அப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா 18 மடங்கு அளவிற்கு அதிகமான முகமூடிகளை கொள்முதல் செய்துள்ளது எனவும், சீன அரசாங்கத்தின் சுங்கவரி சங்கத்தில் இருந்து நேரடியாக தரப்பட்ட ஆதாரங்கள் தன்னிடத்தில் உள்ளன எனவும் நவரோ கூறியுள்ளார் .
அதாவது 2 பில்லியனுக்கும் அதிகமான முகமூடிகள் மற்றும் கண்ணாடி கையுறைகள் போன்றவற்றிற்கு மட்டும் சீனா அதிக நிதியை செலவு செய்துள்ளது . ஐரோப்பா இந்தியா பிரேசில் போன்ற நாடுகளில் போதுமான அளவிற்கு பிபிஇ எனப்படும் சுய பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவிற்கு இல்லை ஆனால் சீனா அதை முன்கூட்டியே கொள்முதல் செய்து பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது . இது ஒரு மோசமான நடவடிக்கை என சீனாவை கண்டித்துள்ள அவர் சீனாவின் இதுபோன்ற விஷயங்களை நிச்சயம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சீனா என்ற ஒரு நாடு சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொள்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக அமெரிக்காவுக்கு மருந்து மற்றும் மருத்துவ பொருட்களுக்காக கடல் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் நிலையில் சீனாவின் மருத்துவ உபகரண பதுக்கலே இந்தியாவில் ஏற்பட்டுள்ள தட்டுபாட்டிற்கு காரணம் என கூறி இருப்பது சீனாவுக்கு எதிராக இந்திவை கொம்பு சீவும் நடவடிக்கையே என சர்வதேச அரசியில் நோக்ககர்கள் தெரிவிக்கின்றனர்.