சீனாவை தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கும் அமெரிக்கா..!! நோய் பரப்பிய பாவத்திற்கு பதிலடி..!!
கிட்டத்தட்ட 150 கோடி மக்கள் வாழும் நாடான சீனாவில் 82 ஆயிரம் பேருக்கு மட்டும் கொரானா வைரஸ் பரவியது அதில் 3 ஆயிரத்து 300 பேர் மட்டுமே இறந்தார்கள் என சீனா கூறுவது வடிகட்டிய பொய் என முன்னால் ஐக்கிய நாடுகளின் சபையில் அமெரிக்க தூதரான நிக்கி ஹாலே கூறியுள்ளார்.
சீனா உலகிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பை குறைத்து காட்டுகிறது என தொடர்ந்து அமெரிக்கா சீனாவை குற்றம் சாட்டி வருகிறது . நேற்று இதுகுறித்து தெரிவித்திருந்த சீன வெளியுறவு துறை அதிகாரி , அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் , தொடர்ந்து சீனாவுக்கு எதிரான சந்தேகம் எழுப்பி வருகின்றனர் இது ஒரு கீழ்த்தரமான செயல் என கடுமையாக விமர்சித்திருந்தார், சீனாவின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள அமெரிக்காவின் ஐநாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஹாலோ, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய உண்மைத் தகவல்களை கூறி சீனா மதிப்பாக நடந்து கொள்ள வேண்டுமென சாடியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வருகிறது , இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .
ஒரு சில வாரங்களில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது, ஸ்பெயின் , இத்தாலி , போன்ற நாடுகளில் இறந்தவரின்களின் எண்ணிக்கை தளா 10 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்நிலையில் வைரஸ் உருவான சீனாவில் தற்போது வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என சீனா தெரிவித்து வருகிறது, வைரஸ் பரவிய நாடுகளிலேயே அதன் தாக்கம் மிகத்தீவிரமாக இருக்கும் போது வைரஸ் உருவான சீனாவில் அந்த வைரஸ் எப்படி கட்டுப்படுத்தப்பட்டது, என உலக நாடுகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா சீனா தன்னுடைய பாதிப்பை முழுவதுமாக மறைத்து விட்டது என்றும், பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறது என்றும் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அது உலகத்தின் பார்வையில் இருந்து மொத்தமாக மறைத்துவிட்டது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது .
கிட்டத்தட்ட 150 கோடி மக்கள் வாழும் நாடான சீனாவில் 82 ஆயிரம் பேருக்கு மட்டும் கொரானா வைரஸ் பரவியது அதில் 3 ஆயிரத்து 300 பேர் மட்டுமே இறந்தார்கள் என சீனா கூறுவது வடிகட்டிய பொய் என முன்னால் ஐக்கிய நாடுகளின் சபையில் அமெரிக்க தூதரான நிக்கி ஹாலே கூறியுள்ளார். முன்னதாக வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா அளித்த புள்ளிவிவரங்கள் நம்பத் தகுந்ததாக இல்லை, அவர்கள் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் கொஞ்சம் பரவாயில்லை என்று மற்றவர்களை சொல்லுமளவிற்கு உள்ளது, இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இத்தாலி முதலிடத்திலும் ஸ்பெயின் இரண்டாவது இடத்திலும் , அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது .