கியுபாவிடம் கொடூர முகத்தை காட்டும் அமெரிக்கா..!! ஈவு இறக்கமில்லாத ட்ரம்ப்..!!
மருத்துவ பொருட்களின் கப்பல்கள் , முககவசங்கள் , விரைவாக நோயறியும் கருவிகள் , மற்றும் வென்டிலேட்டர்கள் அமெரிக்காவால் தடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரசை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சிகிச்சைக்கான மருந்து பொருட்கள் கியுபாவை அடைவதை அமெரிக்கா திட்டமிட்டு தடுத்து விடுவதாக கியுபாவின் மனிதநேய ஒற்றுமை சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது . அமெரிக்காவுக்கும் கியுபாவுக்கும் இடையே நீண்ட நாள் பகை இருந்து வரும் நிலையில் கியுபாவின் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கியுப நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய மருந்து பொருட்கள் கூட கிடைக்காத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. கியுபாவுக்கும் மருந்துப் பொருட்கள் ஏற்றி வரும் கப்பல்களை அமெரிக்கா தடுத்து வைத்துள்ளதாக குற்றசாட்டு எழுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மனித நேய ஒற்றுமை சங்கம், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது , இதுவரை உலக அளவில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் , இறந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது .
மருத்துவம் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் கியூபா தற்போது கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறது , இந்நிலையிலும் கொரோனா வைரசால் இன்னலுற்று வரும் நாடுகளுக்கு தங்களது மருத்துவ குழுவை அனுப்பி சேவையாற்றி வருகிறது . இதுவரை 14 க்கும் அதிகமான நாடுகளுக்கு கியுபா மருத்துவ குழுக்களை அனுப்பியுள்ளது . என மனித ஒற்றுமை சங்கம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையிலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது , கியூப அரசாங்கத்துடனும் மக்களுடனும் மனிதநேய ஒற்றுமை சங்கம் தனது ஆழ்ந்த ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது . உலகமே வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் மிகவும் கேலிக்குரியதாக உள்ளது பல்வேறு நாடுகளில் இருந்து கியூபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருத்துவ பொருட்களின் கப்பல்கள் , முககவசங்கள் , விரைவாக நோயறியும் கருவிகள் , மற்றும் வென்டிலேட்டர்கள் அமெரிக்காவால் தடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் வைரசால் பாதிக்கப்பட்டுள்ள கியுப மக்களுக்கு அந்த பொருட்கள் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . இப்படி பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கியூபாவில் நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும் கியூபா தன்னலமற்ற முறையில் பிராந்தியத்திலும் உலக அளவில் உள்ள நாடுகளுக்கு மருத்துவ சிகிச்சை உதவிகளை வழங்கி வருகிறது . கியுபாவுக்கு எதிராக அமெரிக்கா செய்துவரும் மக்கள் விரோத போக்கை கியூப மனித ஒற்றுமை சங்கம் கண்டிக்கிறது . இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் இதிலிருந்து மீண்டு வரவும் உலகநாடுகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அமெரிக்கா கியூபா மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது அமெரிக்கா எவ்வளவு கொடூரமான சிந்தனை கொண்ட நாடு என்பதை சர்வதேச நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் கிடைக்காமல் கியூபா போராடி வரும் நிலையில் கியூபாவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதுடன் அமெரிக்காவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறோம் என சங்கம் எச்சரித்துள்ளது .