ஈரானின் நடவடிக்கைகளை சமாளிக்க சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சருடன்,  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் . சில நாட்களுக்கு முன்னர்  அமெரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டுப் புரட்சி படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார் சுலைமானி  அமெரிக்காவுக்கு எதிராக தீவிரவாத சதி திட்டத்தில் ஈடுபட்டதால்  அவரை கொன்றோம் என அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்தது  இதனால் அமெரிக்காவை பழிதீர்க்க சூளுரைத்த ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது . 

இந்நிலையில் ஈரானின் நடவடிக்கையை எதிர்கொள்ள சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இதில் அணு ஆயுத தவிர்ப்பு விவகாரம் , யுரேனியம் செறிவூட்டல் ,  பொருளாதாரத் தடைகள் போன்ற பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது .  சுலைமானியின் படுகொலைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது .  இந்நிலையில் மத்திய கிழக்கு பகுதிகளில் ஈரானின் நடவடிக்கைகளை எதிர்கொள்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர் . 

இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ,  மற்றும் சவுதி வெளியுறவுத்துறை மந்திரி   ஃபைசல் பின் பர்ஹான் அல் சவுத் ஆகியோர் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள், மற்றும் இருநாட்டு பாதுகாப்பு குறித்து விவாதித்தனர் .  அதேநேரத்தில் மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள  ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்  ஆர்டகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .