சுயநலத்தால் தீயை வைத்து விட்டு அமேசான் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப பிரேசில் அரசு முடிவு செய்துள்ளது. 

55 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் படர்ந்து விரிந்திருக்கும் அமேசான் காடுகளில் அண்மையில் வரலாறு காணாத அளவிற்கு காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள், தாவர இனங்கள் காட்டுத்தீக்கு இரையாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

லட்சக்கணக்கான மரங்கள் தீக்கிரையானதால் ஏற்பட்ட புகை மூட்டம் பிரேசில், பொலிவியா, பெரு, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவியுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத தீயை கட்டுக்குள் கொண்டுவர பிரேசில் அரசு கடுமையாக போராடி வருகின்றன.

 

காட்டுத் தீயை கட்டுப்படுத்தக்கோரி பல்வேறு நாடுகளிலும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகின்றன. இந்நிலையில் அமேசான் காடுகளில் எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ராணுவப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார். இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகளில் பிரேசில் ராணுவப் படையினர் அனுப்பப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரசிலின் 2018ல் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் போல் சாயர் போல்சனாரூ  பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதில் அவர் வாக்குறுதி ஒன்றை அளித்தார். அது என்னவென்றால், இந்தியாவைப் போல பிரேசிலும் விவசாயத்தின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. அந்நாட்டு மக்கள் விவசாயத்தையே தங்களது பொருளாதார மேம்பாடாக கருதி வருகின்றனர்.

இந்நிலையில் அதனை அதிகரிக்கும் விதமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில், அதிக அளவிலான விளைச்சல் நிலத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சுயநலத்தில் விளைவுகளை யோசிக்காமல் அமேசான் காட்டை கவலைப்படாமல் எரித்து சாம்பலாக்கி வந்தார். உலக நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தீயை மூட்டி விட்டு இப்போது அதனை அணைக்க பிரேசில் அதிபர் போராடி வருகிறார்.