உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். 

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலக வங்கியின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த டேவிட் மல்பாஸுக்குப் பதிலாக அஜய் பங்காவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளதாக பைடன் அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன், அஜய் பங்கா மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். 63 வயதான பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.

இதையும் படிங்க: இலங்கையில் மீண்டும் வெடித்தது போராட்டம்... அரசுக்கு எதிராக திரண்ட மக்கள்

வளர்ச்சிக்கான கடன்களை வழங்கும் உலக வங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை வேட்புமனுக்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. தலைவர் பதவிக்கு பெண் வேட்பாளர்களும் பரிசீலிக்கப்படுவார்கள் என்று உலக வங்கி ஏற்கனவே கூறியுள்ளது. உலக வங்கியின் தலைவர் எப்பொழுதும் அமெரிக்கராக இருப்பார், அதே சமயம் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பாரம்பரியமாக ஐரோப்பியர். இந்திய-அமெரிக்கரான பங்கா தற்போது முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக்கின் துணைத் தலைவராகவும், முன்பு மாஸ்டர்கார்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: நைஜீரியாவிலும் பணமதிப்பு நீக்கம்! ஏடிஎம், வங்கிகளை சூறையாடி மக்கள் போராட்டம்!

காலநிலை மாற்றம் உட்பட நமது காலத்தின் மிக அழுத்தமான சவால்களைச் சமாளிக்க பொது-தனியார் வளங்களைத் திரட்டுவதில் பங்காவுக்கு முக்கியமான அனுபவம் உள்ளது என்று பைடன் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்பால் உலக வங்கி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட உலக வங்கியின் தலைவர் மல்பாஸ், தனது பதவி முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் குறித்த தனது நிலைப்பாட்டின் காரணமாக அவர் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.