புறப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் பயங்கர தீ விபத்து.. 122 பயணிகளின் நிலை என்ன?
சீனாவில் சோங்கிங் ஜியாங்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 113 பயணிகள், 9 ஊழியர்களுடன் திபெத் ஏர்லைன்ஸ் விமானம் நைங்கிங்கிற்கு புறப்பட்டது. ஓடுதள பாதையிலிருந்து சிறது தூரம் சென்றதும் விலகியது. இதனால், விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சீனாவில் சோங்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதள பாதையிலிருந்து விலகி தீப்பிடித்த சம்பவத்தில் 113 பயணிகள் உள்பட 122 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சீனாவில் சோங்கிங் ஜியாங்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 113 பயணிகள், 9 ஊழியர்களுடன் திபெத் ஏர்லைன்ஸ் விமானம் நைங்கிங்கிற்கு புறப்பட்டது. ஓடுதள பாதையிலிருந்து சிறது தூரம் சென்றதும் விலகியது. இதனால், விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து உடனே அறிந்த விமானிகள் உடனே விமானத்தை நிறுத்தி 113 பயணிகள் உள்பட 122 பேர் அவசர அவசரமாக விமானத்தின் பின்பக்கமான ஸ்லைடு வழியாக மக்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் லேசான காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து, ஓடுபாதை மூடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் ஏற்பட்ட விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.