இனி எங்குபோய் ஒளிந்தாலும் விடாது போல..!! அதிரவைக்கும் காற்று மாசு ஆராய்ச்சிகள்...!!
காற்றில் கலந்துள்ள மாசுத்துகள்கள் மூலம் கொரோனா வைரஸ் நீண்ட தூரத்திற்கு பயணிக்க கூடும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்,
காற்றில் கலந்துள்ள மாசுத்துகள்கள் மூலம் கொரோனா வைரஸ் நீண்ட தூரத்திற்கு பயணிக்க கூடும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர், இந்நிலையில் காற்று மாசுதுகள்களில் கொரோனா வைரஸ் கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் வைரஸ் எவ்வளவு தூரத்திற்கு பயணிக்க கூடும் என்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் தி கார்டியன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த வைரஸ் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன . இந்த வைரஸின் தன்மை என்ன.? இது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் இதை கட்டுப்படுத்துவதற்கு வழி என்ன.? என்பது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வைரஸ்கள் காற்றில் மிக வேகமாக பரவக்கூடியது எனவும் பல ஆராய்ச்சியாளர்கள் தெறிவித்துள்ள நிலையில் இத்தாலி நாட்டின் போலோக்னா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் , இந்த வைரஸ் காற்றில் பரவுவது குறித்த ஆராய்ந்து வருகின்றனர் . அதில் தெற்கு இத்தாலியின் பெர்கமோ மாகாணத்தில் ஒரு நகர்ப்புற மற்றும் ஒரு தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் வெளிப்புற காற்று மாசு மாதிரிகளை சேகரித்து ஆராய்ந்ததில் அதில் கொரோனா வைரஸ் இருந்ததை உறுதி செய்துள்ளனர் . அந்த ஆய்வுக்குழுவுக்கு தலைமை தாங்கிய இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகத்தின் லியோனார்டோ செட்டி , காற்று மாசுபாட்டின் மூலம் வைரஸ்கள் நீண்ட தூரத்திற்கு பயணிக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் இப்போது எழுந்துள்ளது என கூறியுள்ளார் . தான் ஒரு விஞ்ஞானி ஆக இருந்தும் இது பற்றிய தரவுகள் எனக்கு தெரியவில்லை என்பது எனக்கு கவலை அளிக்கிறது , இது பற்றி நமக்கு தெரிந்தால்தான் இதற்கு ஒரு தீர்வு காண முடியும்
.
இல்லாவிட்டால் அதன் பலன்களை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார் . ஆனால் இதற்கு முன்பாக இதே போன்ற காற்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட இரண்டு குழுக்கள் கொரோனா காற்று மாசு துகள்கள் மூலம் காற்றின் நீண்ட தூரத்திற்கு பயணிக்க முடிகிறது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுபற்றி கூறும் செட்டியின் குழுவினர் , ஊரடங்குக்கு முன்னர் வடக்கு இத்தாலியில் ஏற்பட்ட அதிக அளவு மாசுபாடு அதிக நோய் தொற்றுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர் . ஐரோப்பாவிலேயே மிகவும் மாசுபட்ட பகுதியாக இது இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . இதுவரை எந்த விஞ்ஞான குழுவும் இதை முறையாக பகுப்பாய்வு செய்யவில்லை ஆனாலும் இது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பது அனைத்து வல்லுனர்களும் ஒப்புக் கொள்கின்றனர் என்கிறார். காற்று மாசுக்கள் வைரஸை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது சாத்தியம் ஆனால் கொரோனா வைலஸ் எந்த அளவிற்கு பரவுகிறது என்பது கேள்வி என்கின்றனர். ஆனால் விரைவில் இதற்கான ஆய்வு முடிவு வெளிவரும் என்கின்றனர்.
இருமல் மற்றும் தும்மல்களிலிருந்து பெரிய வைரஸ் நீர்த்துளிகள் காற்றில் கலந்த கொஞ்ச தூரத்திலேயே அழிந்து விடக்கூடும் , ஆனால் சில நேரங்களில் காற்று மாசுவில் கலந்த வைரஸ் கிருமிகள் பல மீட்டர் தூரத்திற்கு முன்னேறவும் செய்கிறது என்கின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் காற்று மாசு ஆராய்ச்சியாளருமான ஜொனாதன் ரீட், வைரஸ் நீர்த்துளிகள் காற்றில் சில நிமிடங்களில் அழிந்தாலும் , மாசுத் துகள்களுடன் ஒன்றிணைந்து காற்றில் கொஞ்ச தூரத்திற்கு பயணிக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை என கூறியுள்ளார். இத்துடன் சீனாவில் ஒரு பூட்டப்பட்ட வீட்டிற்குள் எடுக்கப்பட்ட காற்று மாசுதுகள்களில் கொரோனா வைரஸ் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.