பால்கோட் தீவிரவாத முகாம்களை மீண்டும் செயல்படுத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனையடுத்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது .  பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள்  பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியான பாலக்கோட்டில் முகாம் அமைத்து இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டு வருகின்றனர். 

இந்தியாவுக்கு எதிராக மத மற்றும் ஜிகாதி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.  காஷ்மீரில் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளில் இறங்கி உள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாகக்  கொண்டு செயல்படும் ஜெய்-ஷி- முகமது தீவிரவாத இயக்கம் இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஏற்கனவே  கடந்த 2019 செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படையின் மிராஜ் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது.  இதனால் இந்தியாவின் மீது கடும் கோபத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவம்,  மற்றும் அந்நாட்டு தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவை எப்படியாவது வஞ்சம் தீர்க்க காத்திருக்கிறது.  ஆனாலும் இந்திய பாதுகாப்பு படை,  எல்லை பாதுகாப்பு படை, இந்திய இராணுவ வீரர்கள் எல்லையை  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இந்நிலையில் பால்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத குழுவினர், இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சுமார் 40 முதல் 50 பேர்வரை  பயிற்சி யில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .  இந்திய உளவுத்துறை இந்திய ராணுவத்திற்கு தெரிவித்துள்ள இத் தகவலில் இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்றும் ,  24 மணிநேரம்  தீவிர கண்காணிப்பில் இருக்கவேண்டும் எனவும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.