அப்போ நிதியமைச்சர், இப்போ கால் டாக்சி டிரைவர் - ஆப்கனின் அரசியல் பாவங்கள்..!
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய காலித் பாயெண்டா அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். குடும்பத்திற்கு என்னால் முடிந்தஉ தவிகளை செய்கிறேன்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் காலித் பயெண்டா தற்போது அமெரிக்காவில் கால் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார். வாஷிங்டன் டி.சி. நகரில் உபெர் டிரைவராக பணி செய்து தனது குடும்பத்தை பார்த்துக் கொள்வதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவரே தெரிவித்தார்.
அவரது பயண நேரம் தவிர ஆறு மணி நேரங்களுக்கு சுமார் 150-க்கும் அதிக டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 414 வரை வருமானமாக ஈட்டுவதாக அவர் தெரிவித்தார். உலகின் பல்வேறு நாடுகளும் தலிபான்களால் ஆட்சி நடத்தப்படும் ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. இதன் காரணமாக அந்நாட்டில் கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டு உள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கும் முன், அந்நாட்டின் நிதி அமைச்சர் பதவியில் இருந்து பயெண்டா விலகிக் கொண்டார்.
"இன்று முதல் நிதி அமைச்சர் எனும் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன். நிதித் துறைக்கு தலைமை வகித்தது என் வாழ்நாளின் மிகப் பெரும் பெருமைகளில் ஒன்று ஆகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டதால் இந்த பதிவியில் இருந்து விலும் முடிவை எடுத்துள்ளேன்," என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பயெண்டா குறிப்பிட்டு இருந்தார்.
பதவியை ராஜினாமா செய்ததும், கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய காலித் பாயெண்டா அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். குடும்பத்திற்கு என்னால் முடிந்தஉ தவிகளை செய்கிறேன். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைக்கு அமெரிக்கா தான் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து திடீரெ படைகளை விலக்கிக் கொண்டதாலேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கரமிக்க முக்கிய காரணம் ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் வீழ்ந்த நாளில், காபூலில் உள்ள உலக வங்கி அதிகாரிக்கு குறுந்தகவல் அனுப்பிய காலித் பாயெண்டோ, "மக்களுக்காக பணியாற்றும் சிஸ்டம் ஒன்றை உருவாக்க உலக நாடுகளின் ஆதரவு மற்றும் 20 ஆண்டுகள் நம்மிடம் இருந்தது... நாம் உருவாக்கிய அனைத்தும் சீட்டுக் கட்டுகளை போன்று திடீரென சரிந்து மளமளவென கீழே விழுந்து விட்டது. ஊழலை அடிப்படையாக கொண்டு கட்டிய வீடு," என குறிப்பிட்டு இருந்தார்.