கேரள மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஆப்கனிஸ்தான் சென்று அங்கு ஐஎஸ்ஐஎஸ் தீவாரவாத இயக்கத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தற்போது அவர்கள் ஆப்கனிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிந்து இவரது மகள் நிமிஷா இவர் பாலக்காட்டை சேர்ந்த செபஸ்டின் என்ற  இஷா என்ற நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  பின்னர் முஸ்லிமாக மாறி தனது பெயரை நிமிஷா பாத்திமா என பெயர் மாற்றிக்கொண்டார். 

 கடந்த 2017 ஆம் ஆண்டு நிமிஷா பாத்திமா கணவர் மற்றும் குழந்தையுடன் திடீரென மாயமானார்.  இதுகுறித்த அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  இந்நிலையில் போலீசார் விசாரித்து வந்த நிலையில் அவர்கள் தற்போது ஆப்கனிஸ்தான் சென்று அங்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்ததாக தகவல் கிடைத்துள்ளது .  எனவே கடந்த சில தினங்களுக்கு  முன்பு ஆப்கனிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் வெளிநாடுகளில் இருந்து வந்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த சுமார் 600 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்,  இதில்  பத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது .  அவர்கள் அனைவருமே கேரளாவில் இருந்து சென்றவர்கள் எனவும் இந்திய தேசிய புலனாய்வு முகமை எனப்படும் ஐஎன்ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகள் ஆப்கனிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்ததாக கூறப்படும் நிஷா பாத்திமா மற்றும் அவரது கணவர்  இஷாவின் புகைப்படத்தை நிஷாவின் தாய் பாத்திமாவிடம் காட்டினார். 

அந்த புகைப்படத்தில் இருப்பது தனது மகள் மற்றும் மருமகன் என்றும் கையில் இருப்பதே தனது மகளின் குழந்தை என்றும் அவர் அடையாளம் காட்டினார்.  இது குறித்து தெரிவித்துள்ள பிந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் தனது மகள் குடும்பத்துடன் கொல்லப்பட்டு இருப்பாள் என நினைத்தோம் ஆனால் அவள் எப்படியோ ராணுவத்திடமாவது சிக்கி உயிரோடு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.