அடுத்தடுத்து குண்டு வெடிப்பு... ஓடாமல் ஒளியாமல் தில்லாக பதவியேற்ற அதிபர் வீடியோ...!
ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதற்கிடையே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆப்கானிஸ்தான் அதிபராக 2-வது முறை அஷ்ரஃப் கனி இன்று பதவியேற்கும் விழாவில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதற்கிடையே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தலிபான்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட அஷ்ரஃப் கனி இன்று மிக எளிமையான முறையில் அதிபராக பதவியேற்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த விழாவில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றபோது இந்த விழா மேடை அருகே பல இடங்களில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. ஆனாலும் அதிபர் தொடர்ந்து பதவியேற்பதில் தான் உறுதியாக இருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த குண்டுவெடிப்பில் எத்தனை பேர் உயிரிழந்த விவரம் வெளியாகவில்லை.