ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் பிற்பகலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியில் தொழுகை ஈடுபட்டிருந்த 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3௦க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால், தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.