Asianet News TamilAsianet News Tamil

Afghanistan earthquake: ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 255 பேர் பலி: உதவி கோரும் தலிபான்கள்

An earthquake of magnitude 6.1 hit parts of Afghanistan on Wednesday. :ஆப்கானிஸ்தான் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 255 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆப்கானிஸ்தான் அரசு ஊடகம் 155 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.

afghan earthquake : 6.1 Magnitude Earthquake Hits Afghanistan, Pakistan 130 dead?
Author
Kabul, First Published Jun 22, 2022, 11:04 AM IST

ஆப்கானிஸ்தானி்ல் உள்ள பக்திகா மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் 6.1 என்று ரிக்டர் அளவில் பதிவானது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ தொலையில் பூமிக்கு அடியில் 51கி.மீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

afghan earthquake : 6.1 Magnitude Earthquake Hits Afghanistan, Pakistan 130 dead?

இந்த நிலநடுகத்தில் உயிரிழப்புகள் குறித்து முதலில் தகவல் ஏதும் இல்லை. ஆனால், தற்போது வெளியான செய்தியில் 255 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு ஊடகம் 155 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது. 

அரசின் பக்தர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ உயிரிழந்தவர்கள், மீட்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர் மூலம் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிராரக்ள். பக்திகா பகுதியில் 90 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 12க்கும் மேற்பட்ட மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது

பக்திகா பகுதி அருகே பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. பூகம்பத்தால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும்காட்சிகள் சமூக வலைத்தளத்தில் ட்ரண்டாகி வருகிறது. 

afghan earthquake : 6.1 Magnitude Earthquake Hits Afghanistan, Pakistan 130 dead?

பக்திகா மாகாணத்தில் 4 மாவட்டங்களில்தான் பூகம்பத்தின் சேதாரம் அதிகமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், வீடுகள் இடிந்து தரைமட்டாகியுள்ளன. அனைத்து விதமான உதவும் அமைப்புகள், மீட்புக்குழுவின் உதவியை நாடியுள்ளோம் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர்  பிலால் கரிமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானி் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்டநிலநடுக்கம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பரவல் 500கிமீ வரை இருக்கும். ஏறக்குறைய 1.90 கோடி மக்கள் இதை உணர்ந்திருப்பார்கள் என ஐரோப்பிய நிலவியல் அமைப்பு தெரிவித்துள்ளது

afghan earthquake : 6.1 Magnitude Earthquake Hits Afghanistan, Pakistan 130 dead?

தலிபான் நிர்வாகத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் முகமது நசிம் ஹக்கானி கூறுகையில் “ பெரும்பாலான உயிரிழப்புகள் பக்திகா மாகாணத்தில் நடந்துள்ளது. இந்த பக்திகா மாகாணத்தில் 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம், 250பேர் காயமடைந்திருக்கலாம். கிழக்கு மாகாணங்களான நான்கார்ஹார், கோஸ்ட் ஆகியபகுதிகளிலும் உயிரிழப்பு நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios