ஆப்கானிஸ்தானில் கன்னிவெடியில் சிக்கிய வாகனம் ! 13 பேர் உடல்சிதறி பலி !!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் சாலையோரத்தில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை ஒரு வாகனம் இன்று கடந்தபோது பயங்கரமாக வெடித்ததில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

afganisthan bomb blast  13 dead

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. 

சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். 

இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். 

afganisthan bomb blast  13 dead

இந்த படைகளுக்கு ஆதரவாக அரசுக்கு விசுவாசமான தன்னார்வலர்கள் படையும் இணைந்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் தென்பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் சாலையோரத்தில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் இன்று பிற்பகல் ஒரு வாகனம் சிக்கியது.

இந்த  விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 30-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்ததாகவும் அம்மாகணத்தின் கவர்னர் ஹயாத்துல்லா ஹயாத் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios