பிலிப்பைன்ஸிலும் ஆதார் விரைவில்..! இந்தியாவிடம் கேட்டது ஐடியா..!
இந்திய குடிமகனுக்கு அடையாளம் ஆதார் என்ற நிலை உருவாகி உள்ளது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே...
ஆதார் பொறுத்தவரை எப்படி அலசி ஆராய்ந்து பார்த்தாலும் பல விதங்களில் நல்லது மட்டுமே என தெரியவதுள்ளது. அதே சமயத்தில், மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பது முதல் அனைத்திலும் வங்கி கணக்கு வரை அனைத்திலும் ஆதார் எண் இணைப்பது தனிமனித ரகசியம் பாதுகாப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு மாற்றாக இதனையும் சமாளிக்கும் பொருட்டு மத்திய அரசு சமீபத்தில் ஒரு அறிக்கை விட்டது அதன்படி,
VIRTUAL ID
ரயில் சேவை பயன்படுத்த கூட ஆதார் கட்டாயம் என்றபோதும்,மொபைல் சிம் வாங்க கூட ஆதார்எண் கட்டாயம் என்ற போதும் விர்சுவல் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விர்சுவல் எண்ணை, ஆதார் வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் மார்ச் மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த எண்ணை நமக்கு தேவைப்படும் போது மாற்றிக்கொள்ள முடியும்.அதே வேளையில்,ஆதார் எண்ணுக்கு பதிலாக விர்சுவல் எண்ணை கொடுத்தாலே போதுமானது.
பிலிப்பைன்சிலும் ஆதார் விரைவில்...
இந்நிலையில் ஆதார் அட்டை முறையை செயல்படுத்த பிலிப்பைன்ஸ் நாடு விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆதார் திட்டத்தை செயல்படுத்தும் முறை தொடர்பான தகவல்களை மத்திய அரசிடம் கேட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து ஆதார் எப்படி கொண்டுவந்தார்கள்,எப்படியெல்லாம் உபயோகப் படுத்த வேண்டும், அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்னே என்பதை பிலிப்பைன்ஸ் இந்திய அரசிடம் தகவல் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அதாருக்கு சில குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே எதிர்ப்பு இருக்கும் நிலையில்,பிலிப்பைன்ஸ் நாட்டில் வரவேற்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.