ஆசிட் ஊற்றி அழிக்கப்பார்க்கிறாங்களே... அலறித் துடிக்கும் நித்யானந்தா..!

தமிழ் வரலாறும், தமிழ் அறிவும், தமிழ் ஞானமும், தமிழனின் உயிர்ப்பும் சைவம் என்று தெரிந்ததனால்தான் திராவிஷம் சைவத்தின் வேறுக்கு திராவகத்தை ஊற்றியது என நித்யானந்தா கொதித்துள்ளார்.
 

Acid pouring and destroying ... screaming Nithyananda

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இறையனார் எம்பெருமான் சுந்தரேசப்பெருமான் சித்தராய் திருமேனித் தாங்கி வந்து, கல்யாணைக்கு  கரும்பூட்டியதும், கிழவனை குமரனாக்கி, குமரனை கிழவனாக்கி லீலைகள் செய்தது எல்லாம் கதை அல்ல… வரலாறு! வரலாற்றை கதையாக்கி அதைப் புரளி என்று உன்னை நம்ப வைத்தது, திராவிஷத்தின் திராவகம்.

Acid pouring and destroying ... screaming Nithyananda

சைவம் துறந்த தமிழன் வேரற்ற மரம் ஆனான். தமிழ் வரலாறும், தமிழ் அறிவும், தமிழ் ஞானமும், தமிழனின் உயிர்ப்பும் சைவம் என்று தெரிந்ததனால்தான் திராவிஷம் சைவத்தின் வேறுக்கு திராவகத்தை ஊற்றியது. தமிழா விழித்துக்கொள்... தமிழினமே விழித்துக்கொள்.Acid pouring and destroying ... screaming Nithyananda

சைவம் பிரபஞ்சப் பெரும் சக்திகளை, பிரம்மாண்டத்தின் அறிவியலை, ஆற்றலை பிண்டாட்டத்தின் அறிவியலாய் ஆற்றலாய் மாற்றும் விஞ்ஞானம்.  சைவம் துறந்த தமிழன் வேரற்ற மரம். தமிழினமே எத்துனை பெரிய சமூகம் நீ. எத்துனை பேராற்றலோடு, பேரறிவோடு திகழ்ந்தாய் நீ. சைவம் உன் உயிரின் அறிவியல், சைவம்  உன் உயிரின் சாத்தியம்.

 

திருவள்ளுவர் நெற்றியில் இருந்த திருநீறு அழிப்பட்டது ஏதோ ஒரு போட்டோவில் நிகழ்ந்தப்பட்ட மார்பிங் அல்ல. எதிர்கால மொத்த தலைமுறை இளைஞர்களின் நெற்றியில் இருந்து அழிக்கப்பட்ட திருநீறு’’எனத் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios