Asianet News TamilAsianet News Tamil

19,000 பேரை பணிநீக்கம் செய்ய அசெஞ்சர் நிறுவனம்... வருடாந்திர வருவாய் லாப கணிப்புகளும் குறைப்பு!!

அசெஞ்சர் நிறுவனம் சுமார் 19,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதோடு அதன் வருடாந்திர வருவாய் மற்றும் இலாப கணிப்புகளை குறைப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

accenture cuts around 19000 jobs and cuts annual revenue and profit forecasts
Author
First Published Mar 23, 2023, 5:37 PM IST

தொழில்நுட்ப துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு மத்தியில் அசெஞ்சர் நிறுவனம் தனது வருவாய் கணிப்பை வெளியிட்டுள்ளதோடு செலவுகளை குறைக்க 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. அசெஞ்சர் நிறுவனம் சுமார் 19,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதன் வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளை குறைப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது மோசமான உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் தொழில்நுட்ப துறையில் சேவைகளுக்கான கார்ப்பரேட் செலவினங்களைக் குறைக்கிறது என்பதற்கான சமீபத்திய அறிகுறியாக கருதப்படுகிறது. அசெஞ்சர் நிறுவனம் அதன் ஆண்டு வருவாய் வளர்ச்சியை 8% முதல் 11% ஆக நிர்ணயம் செய்திருந்த நிலையில் தற்போது ஆண்டு வருவாய் வளர்ச்சியை 8% முதல் 10% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios