மரணத்தில் முடிந்த பாம்புகளின் நட்பு: 140 பாம்புகளுடன் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
அமெரி்க்காவில் 140 பாம்புகளுடன் வாழ்ந்த பெண், மலைப்பாம்பால் கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சுத்திணறி பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.
அந்த பெண்ணின் கழுத்தை நெறித்து சுத்தியிருந்து தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் நீளமான மலைப்பாம்பு வகையாகும்.
அமெரிக்காவின் இண்டியானா மாநிலம், பிரண்டன் கவுண்டியில் ஆக்ஸ்போர்ட் நகரைச் சேர்ந்தவர் லாரா ஹர்ஸ்ட்(வயது36). இவருக்கு சொந்தமான வீட்டில் 140 பாம்புகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை இரவு இண்டியானா மாநில போலீஸாருக்கு 911 அவசர எண்ணில் ஒருவர் பேசினார். அதில் ஆக்ஸ்போர்ட் நகரில் ஒருவீட்டில் ஒருபெண் கழுத்தில் மலைம்பாம்பு சுற்றுப்பட்ட நிலையில் உணர்வற்று இருக்கிறார் உதவிக்கு வரவும் என தகவல் தெரிவித்தார்
இதையடுத்து, ஆக்ஸ்போர்ட் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வனத்துறையினர், போலீஸார் அந்த வீட்டுக்குச் சென்றனர். அந்த வீட்டின் கதவை உடைத்துப்பார்த்தபோது, ஹர்ஸ்ட் கழுத்தில் மலைப்பாம்பு சுற்றப்பட்ட நிலையில் கீழே கிடந்தார். போலீஸார் நீண்டபோராட்டத்துக்குப்பின் மலைப்பாம்பை கழுத்தில் இருந்து எடுத்தனர்.
அப்போதும் ஹர்்ஸ்ட் உணர்வற்று இருந்தார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மலைப்பாம்பு ஹரஸ்டின் கழுத்தை நெறித்ததால், கழுத்து எலும்புகள், சுவாசக்குழாய்கள் நெறிக்கப்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் நகர போலீஸ் அதிகாரி செர்கன்ட் கிம் ரிலே கூறுகையில், “ எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் லாரா ஹர்ஸ்ட் வீட்டுக்குச் சென்று பார்த்தோம். அப்போது அவரின் கழுத்தில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றி இருந்தது. நீண்டநேரத்துக்குப்பின் அந்த பாம்பை அகற்றினோம், ஆனால், அதற்குமுன்பாகவே லாரா இறந்துவிட்டார். அவரின் உடற்கூறு சோதனையில் அவர் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன காரணம் எனத் தெரியவில்லை. இந்த வீ்ட்டை வாடகைக்கு எடுத்து பாம்புகள் வாழ்வதற்காகவே லாரா மாற்றியுள்ளார். அந்த வீ்ட்டில் 140 வகை பாம்புகள் இருந்தன அந்த பாம்புகள் அனைத்தும் வனத்துறை மூலம் பிடிக்கப்பட்டு காடுகளில் விடப்பட்டன” எனத்தெரிவி்த்தார்.