ரூ.11 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்ட ஒற்றை மாஸ்க்... அப்படி என்னதான் இருக்கிறது..?
கொரோனாவுக்காக மாஸ்க் அணிய வேண்டும் எனக்கூறினால் அதையும் வைத்து ஆடம்பர விளம்பரம் செய்கின்றனர்.
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வர, ஆபத்திலும் விளம்பரம் தேடும் கோஷ்டிகள் ஆங்காங்கே உலவி வருகின்றனர். கொரோனாவுக்காக மாஸ்க் அணிய வேண்டும் எனக்கூறினால் அதையும் வைத்து ஆடம்பர விளம்பரம் செய்கின்றனர்.
ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.200 மருந்து கடைகள், தெருவோர கடைகளில் மாஸ்குகள் விற்பனையாகி வரும் நிலையில் ரூ.11 கோடியில் ஒரு மாஸ்க் தயாராகி உள்ளது. இந்த மாஸ்க் தான் உலகின் விலையுயர்ந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் தங்கம் மற்றும் வைரம் கலந்த மாஸ்க் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றும் இவற்றின் விலை இலட்சக்கணக்கில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் உலகின் விலையுயர்ந்த மாஸ்க் ஒன்றை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது இதன் விலை 1.5 மில்லியன் டாலர் என்றும் அதாவது இந்திய மதிப்பில் 11.23 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த பிரபல நகை நிறுவனம் ஒன்று இந்த மாஸ்க்கை அறிமுகம் செய்துள்ளது.18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த மாஸ்க்கில் 3600 எண்ணிக்கை கொண்ட கருப்பு மற்றும் வெள்ளை நிற கற்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவு விலையுயர்ந்த இந்த ஆடம்பரமான மாஸ்க், கொரோனா வைரஸிடம் இருந்து மனிதர்களை பாதுகாக்குமா? என்பது கேள்விக்குறியே.
கடந்த சில வாரங்களுக்கு முன் 3 கிலோ தங்கத்தில் ஒருவர் ஆடம்பரமான மாஸ்கை தயாரித்து அணிந்து வந்தார். அதனையும் மிஞ்சி விட்டது இந்த ரூ.11 கோடி மாஸ்க்.