சந்தேகத்தால் மனைவி, குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற கொடூரம்…. சிறையில் அடைக்கப்பட்ட சைக்கோ கணவன்…..
இங்கிலாந்தில் இளைஞர் ஒருவர் தன் மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரையும் இரண்டு குழந்தைகளையும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதுடன் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் அந்த இளைஞனுக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சமி சலீம். இவருக்கு அரினா சயீத் என்ற மனைவியும் ஷாதியா என்ற மகளும் ரமி என்ற 4 வயது மகனும் இருந்தனர். சமி சலீம் அவரது மனைவி மீது சந்தேகம் மற்றும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் மன போக்கிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி செல்போன் பயன்படுத்தவும் வெளியே எங்கும் செல்லக்கூடாது எனவும் தடைவிதித்துள்ளார். ஆனால் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அவரது மனைவி செல்போன் பயன்டுத்தியது சலீமுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது.
இதனால் ஆத்திரமடைந்த சலீம், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் வாயை பொத்தி இழுத்துச்சென்று தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த பின்னர் சடலங்களை ஒரு அறையில் அடுக்கியுள்ளார். அதன் பின்னர் சாப்பிட்டு கொண்டே டிவி பார்த்த சலீம் இறுதியாக எரிவாயு இணைப்பையும் பிடுங்கி விட்டுவிட்டு வீட்டிற்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை உடைத்து சலீமை காப்பாற்றி உள்ளனர். வீட்டின் ஒரு அறையில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் எரிந்த நிலையிலும் இருந்ததையும் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
உடனடியாக அங்கு வந்த போலீஸ் , மயக்க நிலையில் இருந்த சமி சலீம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தின்போது அதிக புகை ஏற்பட்ட காரணத்தினால் சலீம் இருந்த அறைக்கு தீ பரவவில்லை.
இந்த கொடூர சம்பவத்தை செய்த சலீம் ஒரு வித மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கைது செய்து விசாரிக்கும் போது தெரியவந்தது. ஆனாலும், ஒரு வருடமாக நடைபெற்ற இந்த விசாரணையில், லிவர்போல் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதில் 3 கொலைகளை செய்துள்ள குற்றத்திற்காக சலீமுக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.