நேபாள சுற்றுலா ஹெலிகாப்டர் எவரெஸ்ட் சிகரத்தில் மோதி விபத்து: 5 மெக்சிகோ சுற்றுலா பயணிகள் பலி

நேபாளத்தில் ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 6 பேருடன் சென்ற தனியார் நிறுவன ஹெலிகாப்டர் காலை 10.12 மணி முதல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.

A helicopter with 6 people on board has gone missing in Nepal.

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் பயணித்தபோது மலை உச்சியில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர்.

"சொலுகும்புவில் இருந்து காத்மண்டு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் காலை 10 மணியளவில் கட்டுப்பாட்டுக் அறையுடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது" என்று ஞானேந்திர புல் என்ற அதிகாரி கூறுகிறார்.

ஆட்டிட்யூட் ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த 9NMV என்ற ஹெலிகாப்டர் சரியாக காலை 10:12 மணிக்கு ரேடாரில் இருந்து விலகியுள்ளது. காணாமல் போன ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டவர்கள் உள்பட ஆறு பேர் பயணித்துள்ளனர். இவர்களில் ஹெலிகாப்டர் பைலட் தவிர 5 பேரும் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர்.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பயணிகளும் பலியாகியுள்ளனர். அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்ற பைலட் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

2075ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அமெரிக்காவை முந்தும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு

A helicopter with 6 people on board has gone missing in Nepal.

நேபாளத்தில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி 5 இந்தியர்கள் உள்பட 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமானக் குழுவினர் நால்வர் உள்பட 68 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பொக்காரா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்தது.

அந்நாட்டில் விமான விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 22 பேருடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானார்கள். போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது, விமானப் பணியாளர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்காதது ஆகியவையே நேபாளத்தில் விமான விபத்துகள் நடப்பதற்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

விமானப் பாதுகாப்புத் தரவுத்தளம் அளிக்கும் தகவலின்படி, கடந்த 30 ஆண்டுகளில் 27 பயங்கரமான விமான விபத்துகள் நடந்துள்ளன. வானிலை நிலவரத்தைச் சரியாகக் கணிக்காதது, போதிய பயிற்சி இல்லாத  விமானிகள், விமானம் இயக்குவதை கடினமாக்கும் மலைப்பகுதிகள், விமானங்களில் புதிய முதலீடுகள் செய்யாதது, உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புக் குறைபாடுகள் முந்தைய விமான விபத்துகளுக்குக் காரணமாக இருந்துள்ளன.

வேதாந்தாவை கைவிட்ட பாக்ஸ்கான்! திடீரென செமி கண்டக்டர் உற்பத்தி ஒப்பந்தம் முறிந்து ஏன்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios