a girl statue in wall street

அமெரிக்காவின் வால்ஸ் நகர வீதியில் காளைக்கு நேர் எதிராக அமைக்கப்பட்டிருக்கும் சிறுமி சிலையை உடனடியாக அகற்றும் படி Arturo Di Modica வலியுறுத்தி உள்ளார். 

பங்குச் சந்தையில் வணிகம் செய்பவர்களுக்கு காளையும் கரடியும் நன்கு பரீட்சியம். பங்குகளின் விலை உயர்ந்து நல்ல லாபத்தில் வணிகம் நடைபெறும் நிலையை காளை என்று குறிப்பிடுவர்.

வர்த்தகம் படுபாதாளத்திற்குச் சென்று முதலீட்டாளர்கள் கையறு நிலையில் பங்குகளை விற்கும் நிலை கரடி. சுருக்கமாக சொன்னால் லாபம் வந்தால் பங்குச் சந்தை கரடியின் கையில் நஷ்டம் ஏற்பட்டால் பங்குச் சந்தை கரடியின் கைப்பிடியில்.

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தை அமெரிக்காவின் வால்ஸ் சாலையில் உள்ள நியூயார்க் பங்குச் சந்தை. 1980 ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. முதலீட்டாளர்கள் பதறிப் போயினர்.

எங்கும் நஷ்டம். இருப்பதை காப்பாற்றிக் கொண்டாலே போதும் எனக் கருதி ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர். 

செய்வதறியாது திகைத்து நின்ற பங்குச் சந்தை நிறுவனம் நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழ சீறிப் பாயும் காளை சிலையை அமைப்பது என முடிவெடுத்து இதற்கான பணியை Arturo Di Modicaவிடம் ஒப்படைத்தது.

சுமார் ஒன்றரை டன் வெங்கலத்தை பயன்படுத்தி Arturo தயாரித்த காளை சிலை நிறுவப்பட்டது. வால்ஸ் தெருவின் அடையாளமாகவே மாறிவிட்ட இக்காளைச் சாலைக்கு முன்பு தினமும் ஆயிரக்கணக்கானோர் செல்பி எடுத்துச் செல்வது வாடிக்கை. 

இதற்கிடையே சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இக்காளைச் சிலைக்கு முன்பு சிறுமி சிலை நிறுவப்பட்டது. பாயும் காளை முன்பு தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்து தனக்கு பயமில்லை என்பதை உணர்த்தும் வகையில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சினம் கொண்டு சீறி வரும் காளை முன்பு பயமறியாமல் சிறுமி நிற்பதை உணர்த்தும் தோற்றம் கொண்ட இச்சிலையை காண தினமும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்து வருகின்றனர்.

ஆனால் காளை பக்கம் நின்று புகைப்படம் எடுக்க மக்களிடையே ஆர்வம் குறைத்து வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த Arturo சிறுமி சிலையை உடனடியாக அகற்றும் படி வலியுறுத்தி உள்ளார்.