முதுகு பையில் "லப் டப் இதயம்"...! உலகை உலா வரும் பெண்...ஆச்சர்யத்தின் உச்சம்...!
இதயத்தை முதுகில் சுமந்து உயிர் வாழும் ஒரு பெண்மணியின் வாழ்க்கை முறை மக்களிடேயே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த செல்வா ஹுசைன் என்ற பெண்ணின் இதயம் செயலிழந்து விட்டது. அதனால் அவர் ஹரிபீல்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை செய்து செயற்கை உதயம் பொருத்தப்பட்டது.அதாவது செயற்கை இதயத்தில்,இரண்டு பெரிய பிளாஸ்டிக் டியூப்கள் அவரது இதயத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். உடன் செயற்கை இதயத்தை தூண்டும் வகையில்,அதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் மூலம் லப்டப் என துடிக்க ஆரம்பிக்கும்.
இந்த கருவியை பொறுத்த 73 லட்சம் செலவு செய்து உள்ளனர்.அது மட்டுமின்றி, மருத்துவர்கள் ஆலோசனைப்படிதீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த செயற்கை கருவியை ஹூசைன் தனது முதுகில் மாட்டிக் கொண்டுள்ளார்.
இந்த பையுடன் தான் எங்கு சென்றாலும், இவர் செல்ல முடியும், அதாவது தன் உயிரையே ஒரு பையில் வைத்து, உலகம் முழுவதும் வலம் வருகிறார் இந்த பெண்மணி...