நிர்வாணமாய் நின்று திருமணம் செய்துக் கொண்ட காதல் ஜோடி..! பிறகு என்ன நடந்தது..? நீங்களே பாருங்க...!
இத்தாலியில் காதல் ஜோடி ஒன்று, நிர்வாண கோலத்தில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலியைச் சேர்ந்த வேலன்டின் என்பவர், ஆன்கா ஆர்சன் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இத்தாலியில் காதல் ஜோடி ஒன்று, நிர்வாண கோலத்தில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இத்தாலியைச் சேர்ந்த வேலன்டின் என்பவர், ஆன்கா ஆர்சன் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு இருவரது வீட்டாருமே பச்சைக் கொடி காட்டிவிட்டனர். அடுத்தது என்ன... திருமணம்தான். சிலர் கோலாகலமாக திருமணம் நடத்த திட்டமிடுவர். சிலர் சிம்பிளாக திருமணம் இருக்க வேண்டும் என்பார்கள். சிலர் விமானத்தில் திருமணம் செய்து கொண்டவர்களும் உண்டு. ஆனார் வேலன்டின் - ஆன்கா ஆர்சன் ஜோடி மிகவும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளன. ஆம்... அது மிக வித்தியாசமானதுதான். இவர்கள் நிர்வாணமாக திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்கள்.
இந்த விபரீத ஆசையை வெளியில் சொல்லவும் அவர்கள் தயங்கினர். ஆனாலும், இது குறித்து நெருங்கிய நண்பர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் வேலன்டின் - ஆன்கா ஆர்சன் ஆசைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இத்தாலியில் உள்ள தீவு ஒன்றுக்கு காதல் ஜோடியும் அவர்களது நண்பர்கள் என 4 பேர் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அந்த ஜோடி நிர்வாணமாகவே திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடன் வந்த நண்பர்கள் இருவரும் நிர்வாணமாக இருந்தனர்.நிர்வாண கோலத்தில் திருமணம் செய்து கொண்ட பின் வேலன்டின் பேசும்போது, நாங்கள் இருவருமே இயற்கையை ரசிப்பவர்கள். அதனால்தான் நிர்வாணமாக திருமணம் செய்ய விரும்பினோம்.
எங்களின் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு மட்டுமே அழைப்பு விடுத்தோம். எங்களின் ஆசைக்காக செய்த திருமணம். இந்த ஆண்டு இறுதியில் எங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார். இந்த காதல் ஜோடி நிர்வாண கோலத்தில் திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.