உலகம் இதுவரை கண்டிராத லாக்டவுன்கள்... கொரோனாவால் உலகில் 88 நாடுகளில் முழு ஊரடங்கு உத்தரவு!
அல்பேனியா, அல்ஜீரியா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பொலிவியா, போஸ்னா, பிரேசில், கனடா, சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எகிப்து. சால்வேடர், ஃபிஜி தீவு, பிரான்ஸ், கிரீஸ், ஜார்ஜியா, ஜெர்மனி, கவுதமாலா, குர்ன்சே, ஹங்கேரி, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, கொசோவோ, குவைத், லெபனான், லிபியா, லீக்கின்ஸ்டைன், மலேசியா, மெக்சிகோ, நேபாள், நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜீரியா, நார்வே, பாலஸ்தீனம், பனாமா, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், ருமேனியா, ரஷ்யா, சான் மரினோ, செர்பியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், சிங்கப்பூர், ஸ்லோவேகியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, சிரியா, தைவான், தாய்லாந்து, துனிஷியா, துருக்கி, யுஏஇ, இங்கிலாந்து, அமெரிக்கா, வெனிசுலா, பாகிஸ்தான் உள்பட 88 நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கொரொனா வைரஸால் தற்போது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் 75 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாட்டையும் பதம் பார்த்துவருகிறது. குறிப்பாக வல்லரசு நாடுகள், பணக்கார நாடுகள், சூப்பர் பவர் நாடுகள் எல்லாமே கொரோனா வைரஸால் ஆட்டம் கண்டுவருகின்றன. முதன் முதலில் கொரோனா வைரஸ் தலைகாட்டிய சீனாவில், அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு என்ற உத்தி கையில் எடுக்கப்பட்டது. சீனாவில் வூஹானில் 76 நாட்கள் தொடர்ச்சியாக ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் சீனாவில் வூஹானின் அண்டை மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கல் ஏற்படாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவுடன் ஊரடங்கு உத்தரவைத்தான் கையில் எடுத்தன. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் தெரிய ஆரம்பித்தவுடன், கடந்த மார்ச் மாதம் 22 அன்று ஒரு நாள் சோதனை அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. பின்னர் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாம் கட்டமாக மே 3 வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் வெளியே வராமல் இருப்பதுதான் ஒரே வழி என்றாகிவிட்ட நிலையில், உலகில் பல நாடுகளும் தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்ற ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்துவருகின்றன. அந்த வகையில் தற்போது 75 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்ப்பட்டுள்ளன.
இதன்படி அல்பேனியா, அல்ஜீரியா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பொலிவியா, போஸ்னா, பிரேசில், கனடா, சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எகிப்து. சால்வேடர், ஃபிஜி தீவு, பிரான்ஸ், கிரீஸ், ஜார்ஜியா, ஜெர்மனி, கவுதமாலா, குர்ன்சே, ஹங்கேரி, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, கொசோவோ, குவைத், லெபனான், லிபியா, லீக்கின்ஸ்டைன், மலேசியா, மெக்சிகோ, நேபாள், நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜீரியா, நார்வே, பாலஸ்தீனம், பனாமா, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், ருமேனியா, ரஷ்யா, சான் மரினோ, செர்பியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், சிங்கப்பூர், ஸ்லோவேகியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, சிரியா, தைவான், தாய்லாந்து, துனிஷியா, துருக்கி, யுஏஇ, இங்கிலாந்து, அமெரிக்கா, வெனிசுலா, பாகிஸ்தான் உள்பட 88 நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சீனா உள்ளிட்ட சில நாடுகள் ஊரடங்கை தளர்த்தியும் உள்ளன.