ரத்த தானம் செய்த 80 வயது பாட்டி... 203 யூனிட் கொடுத்து கின்னஸ் சாதனை!!

80 வயதான மூதாட்டி ஒருவர் 203 யூனிட் ரத்தத்தை தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

80 year old earns guinness world record by donating 203 unit of her blood

80 வயதான மூதாட்டி ஒருவர் 203 யூனிட் ரத்தத்தை தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இரத்த தானம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒருவரின் இரத்த தானம் ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்களை காப்பாற்ற உதவும். இரத்தத்தில் உள்ள் வெவ்வேறு கூறுகள் பிரிக்கப்பட்ட தேவைப்படும் நோயாளிகளின் தேவைக்கேற்க அளிக்கப்படும். அனைவரும் இரத்த தானம் செய்ய வேண்டும் என்று அதன் முக்கியத்துவத்தை கூறி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜோசபின் மைச்சலுக் என்ற 80 வயது மூதாட்டி தன் வாழ்நாள் முழுவதும் ரத்த தானம் செய்து வருகிறார். மேலும் தொடர்ந்து ரத்ததானம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: காமிக் புத்தகமாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்... நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்திய ஜப்பானிய ரசிகரின் செயல்!!

ஜோசபின் 1965 ஆம் ஆண்டு தனது 22 ஆவது வயதில் இரத்த தானம் செய்யத் தொடங்கினார். அதன்பிறகு, எண்ணற்ற உயிர்களைக் காக்க மொத்தம் 203 யுனிட்டுகளை நன்கொடையாக கொடுத்துள்ளார். கின்னஸ் உலக சாதனைகளின் தரவுப்படி, இந்தியாவின் மதுராவைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர், அதிக இரத்த தானம் செய்ததது சாதனையாக இருந்தது. அவர் தனது வாழ்நாளில் 117 யூனிட்களை வழங்கியுள்ளார். தற்போது அவரது சாதனையை ஜோசபின் முறியடித்துள்ளார். இதுக்குறித்து ஜோசபின் கூறுகையில், பலர் ரத்தப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள்.

இதையும் படிங்க: மார்க் ஜுக்கர்பெர்க் - பிரிசில்லா சான் தம்பதிக்கு பிறந்தது மூன்றாவது மகள்... பெயர் என்ன தெரியுமா?

கர்ப்பம், பிரசவம், விபத்து, அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் பலருக்கு ரத்தம் மிகவும் அவசியம். ஆனால் இன்று ரத்தம் தேவைப்படுகிற அனைவருக்கும் கிடைப்பதில்லை. இரத்தம் கொடுப்பதற்கு என்னுள் இருக்கிறது என்று நினைக்கிறேன். தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். நான் O+ve ரத்தப்பிரிவை சேர்ந்தவர். O+ve என்பது பொதுவாக உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் எப்போதும் அதிக தேவை உள்ள இரத்தக் குழுவாகும். ஏனெனில் இது மிகவும் பொதுவான வகை. அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, அமெரிக்க மக்கள் தொகையில் 37% பேர் மட்டுமே O+ இரத்த வகையைக் கொண்டுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios