8 country people are banned to enter in United States - President Trump Action

வடகொரியா, வெனிசுலா, சிரியா உள்ளிட்ட 8 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு வரும் அந்நிய நாட்டினரை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதிபர் டிரம்ப். இதை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிரம்பின் தடை உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து டிரம்ப் கொண்டுவந்த தடை சட்டம் வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வடகொரியா, வெனிசுலா, ஈரான், சிரியா, லிபியா, சாட், ஏமன், சோமாலியா ஆகிய 8 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், அலுவல் ரீதியான பணிகளுக்காக அமெரிக்காவுக்கு செல்லலாம்.

அமெரிக்க மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.