கஸ்டமர் கேருக்கு  தொடர்ந்து 24 ஆயிரம் முறை அழைப்பு விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஜப்பானில் சைடாமா மாகாணத்தில் கசுகபே நகரை சேர்ந்தவர் அகிடோசி ஒகமோடோ, (வயது 71) , இவர்  தனது தொலைபேசிக்கு ஜப்பான் நாட்டில் கே.டி.டி.ஐ யின் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார்.  இந்நிலையில் தனது தொலைபேசியில் வானொலி ஒளிபரப்புகள் சரியாக கிடைக்கவில்லை என தெரிகிறது.  இதுகுறித்து அந்நிறுவனத்தின் மீது குறை கூறி வந்த இவர். 

அது தொடர்பாக கட்டணமில்லாத இலவச சேவையின் மூலம் தொடர்ந்து கஸ்டமர் கேருக்கு,  ஊழியர்ளுடன் தினமும் விவாதித்துள்ளார்.   தொலைத்தொடர்பு நிறுவனம் அவர்களது ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் அதனால்,  அந்நிறுவனம் தன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறிவந்துள்ளார்.  இதுகுறித்து அவர்கள் பலமுறை இவருக்கு விளக்கம் கொடுத்து வந்துள்ளனர்.  ஆனால் தொடர்ந்து வாடிக்கையாளர் என்னைக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளார் இவர் தொடர்ந்து அழைப்பு கொடுத்ததின் மூலம் மற்ற வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து வர்த்தகத் தடை ஏற்படுத்த முயற்சி செய்த குற்றச்சாட்டின் கீழ் அகிடோசியை போலீசார் கைது செய்துள்ளனர்.  

அதாவது அகிடோசி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 33 முறை என்ற விகிதத்தில்  2  ஆண்டுகளில் 24 ஆயிரம் முறையும் வாடிக்கையாளர் எண்ணிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது .  கைது செய்யப்படுவதற்கு முந்தைய வாரத்தில் மட்டும் 411 முறை அவர் வாடிக்கையாளர் எண்ணுக்கு அழைத்து இருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர் .  முதியவரின் இச் செயல் ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.