புதிய வகை கொரோனா உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் என்றும் இது மிகவும் விரீயமானது, 70 சதவீதம் வேகமாக பரவுக்கூடியது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவின் அறிகுறிகள் என்ன என்பதை இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரசுக்கு இப்போது ஒரு வயதாகிவிட்டது. இதுவரை 200க்கும் மேற்பட்ட  நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை  7.9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17.48 லட்சம் உயிரிழந்துள்ளனர். தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலை 2ம் அலை பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மரபணு மாறி புதுவேடத்தில் அடுத்த வேட்டையை கொரோனா தொடங்கிவிட்டது.

ஆனால், இம்முறை இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் வாழ்வியல் கூறுகளில் மாற்றம் பெற்று உரு மாற்றம் அடைவது இயல்பான ஒன்று என்று மருத்துவ உலகம் கூறுகிறது. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரையில் 17 முறை தனது மரபியல் கூறுகளை மாற்றியுள்ளதாக அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் அறிகுறிகள் சிலவற்றை இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள அறிகுறிகளான வறட்டு இருமல், காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவற்றுடன் சேர்த்து புதிதாக 7 அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசை வலி, தோல் வெடிப்பு, தோல் அரிப்பு ஆகியவை புதிய அறிகள் தென்படுவதாக அறிவித்துள்ளது.