குணமான 51 பேருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று... அதிர்ந்து போன மருத்துவர்கள்..!
சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் 15,11, 346 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 88,403 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,00,000 அதிகமானோர் இந்த வைரஸை வென்று வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த தென் கொரியர்கள் 51 பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் 15,11, 346 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 88,403 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,00,000 அதிகமானோர் இந்த வைரஸை வென்று வீடு திரும்பியுள்ளனர்.
தென்கொரியாவில் சுமார் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தென்கொரியாவின் டாயிகு நகரில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த 51 பேர் குணடைந்துவிட்டதாக அறிவித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், மீண்டும் அவர்களை மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குணமடைந்த 51 பேருக்கும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்த் துறை பேராசிரியர் பால் ஹண்ட், “வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது. சிகிச்சைகளும், பரிசோதனைகளும் முழுமை பெறமாலோ, தவறாகவோ நடந்திருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், தென் கொரிய மருத்துவர்கள் கூறுகையில், மனித உடலில் உள்ள பல்லாயிரம் கோடி செல்களில் பிரிக்க முடியாத வகையில் கொரோனா வைரஸ் ஒட்டிக்கொண்டிருக்கலாம். ஆகையால், இது மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்கள்.