Asianet News TamilAsianet News Tamil

ஆயுதங்கள், உணவோடு 50 ஆயிரம் வீரர்கள் எல்லையில் தயார்... சீனாவுடன் போருக்கு தயாராகும் இந்தியா..!

ஒரு வீரருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு உடை வழங்கப்படுகிறது. அந்த உடை துப்பாக்கி குண்டுகள் துளைக்காத விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உடைகள் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

50000 soldiers ready at the border with weapons and food ... India preparing for war with China
Author
Ladakh, First Published Sep 16, 2020, 4:47 PM IST

லடாக்கில் இந்தியா அதிக படைகளை குவித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு உணவுக்கான வழிகள் வரை அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இதனால் எல்லையில் அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. சீனாவும் எல்லையில் இதுவரை 50 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது.

இந்திய எல்லையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு படைகள் குவிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு பொட்டலங்கள் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஒரு புறம் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் வீரர்களுக்கு ஏற்ற டயட் உணவுகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குளிர்காலம் என்பதால் உணவு மற்றும் உடைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.50000 soldiers ready at the border with weapons and food ... India preparing for war with China

இந்தியாவின் போர் கருவிகள், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் அனைத்தும் குவிக்கப்பட்டு வீரர்களை எப்போதும் தயார் நிலையில் வைத்துள்ளது. டென்ட் அமைப்பது ஆங்காங்கே சுரங்கம் தோண்டும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 35 ஆயிரம் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். போர் விமானங்களும் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ரேடார் உபரகரணங்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றி முள் வேலி அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா அதிக அளவில் பொருத்தப்பட்டுள்ளது.50000 soldiers ready at the border with weapons and food ... India preparing for war with China

ஒரு வீரருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு உடை வழங்கப்படுகிறது. அந்த உடை துப்பாக்கி குண்டுகள் துளைக்காத விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உடைகள் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சீனா இந்த குளிர்காலத்தில் எல்லையில் தங்க வாய்ப்பு உள்ளது. மேலும் 12ஆயிரம் அடி உயரமுள்ள மலைகளில் சீனா ஊடுருவலாம் என்ற கணிப்பும் உள்ளதால் இந்தியா அங்குள்ள மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாக்குப்பிடிக்க தயாராகி வருகிறது என ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios