படுக்கையில் சிறுநீர் கழித்த ஐந்து வயது சிறுவனை அவனது பெற்றோர்களை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ ப்ரூயண்ட்,  ஜோயன் குன்னிங்கம்  தம்பதியர் ,  இவர்களுக்கு ஏஜே ஆண்ட்ரூ என்ற 5 வயது மகன் இருந்தான்,   அடிக்கடி சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழிப்பது வழக்காம  இருந்துள்ளது . 

சம்பவத்தன்றும்  வழக்கம் போல சிறுவன் தான் உடுத்தியிருந்த உடையிலேயே சிறுநீர் கழித்துள்ளான்,  இதனால் ஆத்திரமடைந்த தாய் ஜோயன் சிறுவனை பலமாக தாக்கியுள்ளார் .  அதில் வலி தாங்க முடியாமல் சிறுவன் துடித்து  கதறினான்,  பின்னர் அவனது தந்தை  வந்தவுடன் அவரிடம்  தன் தாய்  தாக்கியது குறித்து புகார் தெரிவித்தான்,  ஆனால் தந்தை  சிறுவன் சிறு நீர் கழித்ததற்காக  கோபமடைந்து  சிறுவனை அவரது பங்குக்கும் சரமாரியாக தாக்கியுள்ளார் . 

 இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ,  சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் .  இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியர் யாருக்கும் தெரியாமல் சிறுவனது உடலை  வீட்டிலிருந்து  வெளியே கொண்டு  சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்து விட்டதாக தெரிகிறது . பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சிறுவனின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்நிலையில் விசாரணையில் சிறுவனின்  தாய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது ,  சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக ஜோயனுக்கு  20 முதல் 60 ஆண்டுகளை வரை சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில்  அடுத்தமாதம்  தந்தை ஆண்ட்ரூக்கு நீதிமன்றம் தண்டனை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது .