Asianet News TamilAsianet News Tamil

40 முதலைகளால் கொல்லபட்ட முதியவர்! கம்போடியா பண்ணையில் நடந்த பயங்கரம்!

முதலைப் பண்ணைகள் அதிகமாக இருக்கும் கம்போடியாவில் முதியவர் ஒருவர் சுமார் 40 முதலைகளால் கடித்துக் குதறிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

40 crocodiles kill Cambodian man after he falls into enclosure
Author
First Published May 27, 2023, 6:30 PM IST | Last Updated May 27, 2023, 6:35 PM IST

கம்போடிய நாட்டைச் சேர்ந்த 72 வயது முதியவர் தனது குடும்பத்தினர் நடத்திவந்த முதலைப் பண்ணையில் முதலைகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் தவறி  விழுந்து உயிரிழந்துள்ளார். சுமார் 40 முதலைகள் அவரைத் தாக்கிக் கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கம்போடிய நாட்டில் சீம் ரீப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் முதலையை முட்டையிட்ட கூண்டில் இருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற போது இந்த விபரீத நிகழ்வு நடந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஒரு குச்சியை பயன்படுத்தி முட்டையை வெளியே எடுக்கப் பார்த்த அவரை ஒரு முதலைகள் உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது.

அணுஆயுத நிலைநிறுத்தம் குறித்து எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் - அமெரிக்காவை கலாய்த்த ரஷ்யா

40 crocodiles kill Cambodian man after he falls into enclosure

அப்போது கூண்டிற்குள் இருந்த மற்ற முதலைகளும் சேர்ந்து அந்த முதியவரின் உடலை கடித்துக் குதறி துண்டு துண்டாக கிழித்து எறிந்துவிட்டன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டதும் நேரில் வந்து விசாரணை செய்தனர்.

2019ஆம் ஆண்டு இதே பகுதியில் இரண்டு வயது சிறுமி முதலை பண்ணையில் அலைந்து திரிந்தபோது முதலைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என அந்நாட்டு காவல்துறை கூறினார். சீம் ரீப்பில் பல முதலை பண்ணைகள் உள்ளன. முட்டை, தோல், இறைச்சி மற்றும் குஞ்சுகளை விற்பதற்காக அந்நாட்டில் முதலைகள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

தலைக்கு தில்ல பாத்தியா.. வெறும் கையில் ராட்சத பாம்பை பிடித்த நபர்.. நீங்களே வீடியோவை பாருங்க..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios