லண்டன் நகரில் 39 பிணங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே இன்று ரோந்துப் பணியில் இருந்த போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டனர். அப்போது, கண்டெய்னரின் உள்ளே கிடந்த 39 பிணங்களை இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

இது தொடர்பாக வடக்கு அயர்லாந்து பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். அவர் தான் கன்டெய்னர் ஓட்டுநர் என தெரியவந்துள்ளது.

அந்த லாரியில் இறந்து கிடந்தவர்கள் யார்? அவர்கள் இறந்த விவரம் எதுவும் தெரியவில்லை. அடைக்கலம் தேடி லண்டனுக்குள் நுழைய முயன்றவர்களா? அல்லது வேறு இடத்தில் கொல்லப்பட்ட பிணங்களா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.