இளம்பெண் ஒருவரை ஹோட்டல் அறையில் வைத்து 30 ஆண்கள் வரிசை கட்டி சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இஸ்ரேல் நாட்டில் நடந்துள்ள இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் ஈலத் நகரில் 16 வயது இளம் பெண் ஒருவரை ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து 30 ஆண்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். 

சிசிடிவி கேமிரா காட்சியில் பெண்ணின் அறைக்கு வெளியே ஆண்கள் கூட்டம் வரிசையாக நின்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக யாரும் நேரடி சாட்சியம் அளிக்கவில்லை. முக்கிய குற்றவாளியான 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட  பெண்ணே தங்களை அழைத்ததாகவும், அவர் மது போதையில் இருந்துள்ளார் எனவும், அறைக்கு வெளியே வரிசையில் நின்றிருந்த ஆண்களே அதற்கு சாட்சி எனவும் கைதான அந்த 27 வயது இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தசம்பவம் இஸ்ரேலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் சிறுமியை ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். டெல் அவிவின் ஹபீமா சதுக்கத்தில் நூற்றுக்கணக்கானவர்களும், இஸ்ரேல் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிறுமிக்கு ஆதரவாக போராட்டம் வெடித்து உள்ளது. 

சிறுமி தற்போது தனது குடும்பத்தினருடன் உள்ளார், மேலும் அவர் பொதுமக்களின் ஆதரவால் ஊக்கத்துடன் இருப்பதாக கூறினார். ஓட்டல் உரிமையாளர் கூறும் போது ஓட்டல் போலீசாருடன் ஒத்துழைக்கிறது என்பதை வலியுறுத்தினார். தனக்கு  குழந்தைகள் இருப்பதாகவும், அந்தப் பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து வருந்துவதாகவும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை அடுத்து, "வெட்கப்படுவதாக" அவர் கூறினார்,