திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக சென்று அருகே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறினர். ஆழமான பள்ளத்தாக்கு என்பதால் மலைப்பாதையில் இருந்த பேருந்து விழுந்த வேகத்தில் சுக்கு நூறாக நொறுங்கிச் சிதறியது. 

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து பேருந்து ஒன்று நேற்று காலை ஸ்கார்டு பகுதிக்கு கிளம்பியது. பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணம் செய்தனர். கில்கிட் அருகே இருக்கும் ராவுண்டு என்கிற மலைப்பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக சென்று அருகே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறினர். ஆழமான பள்ளத்தாக்கு என்பதால் மலைப்பாதையில் இருந்து பேருந்து விழுந்த வேகத்தில் சுக்கு நூறாக நொறுங்கிச் சிதறியது.

பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி பயணிகள் படுகாயங்களுடன் அலறி துடித்தனர். அந்த வழியாக சென்றவர்கள் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்து காவலர்கள் மீட்பு படையினரின் உதவியுடன் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6ம் வகுப்பு மாணவியை மாறி மாறி கற்பழித்த கொடூரர்கள்..! ஆற்றுப்பகுதியில் ஆடைகளை அவிழ்த்து அட்டூழியம்..!