கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கென்ய நாட்டில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது, இதனால் அந்நாடு செய்வதறியாது  பீதி அடைந்துள்ளது .  ஏற்கனவே உணவின்று பசி பட்டினியில்  சிக்கித் தவிக்கும் கென்யா வெட்டுக்கிளிகளால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருவது அந்நாட்டில் மீண்டும் பஞ்சம் ஏற்படும் சுழலை உருவாகியுள்ளது.  கிழக்கு ஆப்பிரிக்க  நாடுகளான கென்யா , எத்தியோப்பியா ,  சோமாலியா ஆகிய நாடுகளில்  வெட்டுக்கிளி களின் உற்பத்தி அபரிதமாக உள்ளது .

கும்பல் கும்பலாக கோடிக்கணக்கில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது . சமீபத்தில் தமில் வெளியான திரைப்படம் ஒன்றில் விவசாயத்தை வெட்டுக்கிளிகள் எப்படி பாழ்படுத்துகிறது என்பது காட்டப்பட்டிருக்கும் அதேபோன்று கென்யாவில் தற்போது அதிக அளவில் உற்பத்தியாகி உள்ள வெட்டுக்கிளிகள் அந்நாட்டு விவசாயத்தையே அடியோடு அழித்து வருகிறது. திடீரென உருவாகியுள்ள  கோடிக்கணக்கான  வெட்டுக்கிளிகள் டன் கணக்கில் பயிர்கள் வேட்டையாடி வருகின்றன . கென்யாவில் மட்டும் சுமார் 200 பில்லியன் வெட்டுக்கிளிகள்  படையெடுத்துள்ளதாக ஐக்கிய  நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது . 

விவசாயத்தை முற்றிலுமாக அழித்துவரும் வெட்டுக்கிளிகளை மருந்து தெளித்து கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை சுமார் 71 கோடியே 41 லட்சம் ரூபாயை ஒதுக்கி உள்ளது .  சோமாலியா ,  எத்தியோப்பியா போன்ற நாடுகளில் அதிகமாக மழை பெய்து  அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவே  வெட்டுக்கிளிகள் பெருக்கம் அதிகமாகி இருப்பதாக கூறப்படுகிறது .  கென்யா எத்தியோப்பியா சோமாலியாவையடுத்து வெட்டுக் கிளிகள் தற்போது தெற்கு சூடான் ,  உகாண்டா உள்ளிட்ட நாடுகளுக்கும் படையெடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.