Asianet News TamilAsianet News Tamil

இது புதுசு... மேலும் இரு ஒமிக்ரான் துணை வேரியண்ட்கள் கண்டுபிடிப்பு..! WHO சொல்வது என்ன?

ஒமிக்ரான் தொற்றின் மற்றும் இரண்டு துணை வேரியண்ட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை BA. 4 மற்றும் BA. 5 என அழைக்கப்படுகிறது.

2 New Omicron Sub-Variants BA.4 And BA.5 On WHO Radar
Author
India, First Published Apr 14, 2022, 11:58 AM IST

கொரோனா வைரஸ் தொற்றின் மற்றொரு வேரியண்டான ஒமிக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்புக்களை அதிகப்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் வேரியண்டின் BA. 2 துணை வேரியண்ட் உலகம் முழுக்க பரவி இருக்கிறது. இதுவரை சோதனை செய்யப்பட்டதில் 94 சதவீத பாதிப்புகள் ஒமிக்ரான் BA. 2 துணை வேரியண்ட் ஆகும். தொடக்கம் முதலே புதுப் புது கொரோனா வைரஸ் தொற்றுக்கள் நம்மை அச்சுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில், ஒமிக்ரான் தொற்றின் மற்றும் இரண்டு துணை வேரியண்ட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை BA. 4 மற்றும் BA. 5 என அழைக்கப்படுகிறது. புதிய ஒமிக்ரான் BA. 4 மற்றும் BA. 5 வகை தொற்றுக்கள் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு இருக்கிறது. முற்றிலும் புதிய வகை வைரஸ் தொற்று பற்றி உலக சுகாதார மையம் ஆய்வு செய்ய துவங்கி இருக்கிறது. ஏற்கனவே உலக சுகாதார மையம் BA. 1 மற்றும் BA. 2 தொற்றுக்களை ஆய்வு செய்து வருகிறது. தற்போது இதனுடன் புது தொற்றுக்களும் இணைந்துள்ளன.

2 New Omicron Sub-Variants BA.4 And BA.5 On WHO Radar

ஒமிக்ரான் BA. 4 மற்றும் BA. 5 என்றால் என்ன?

“தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு BA. 4 மற்றும் BA. 5 என பெயரிடப்பட்டுள்ளன. புதிய வைரஸ் தொற்றுக்கள் தென்ஆப்பிரிக்காவில் தொற்றுநோய்களின் அதிகரிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. மேலும், அவை பல நாடுகளின் மாதிரிகளில் கண்டறியப்பட்டு உள்ளது. தற்போதைய தகவல்களின் படி போட்ஸ்வானா, பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது” என தென்ஆப்பிரிக்கா நாட்டிற்கான தொற்றுநோய் தடுப்பு மைய இயக்குனர் துலியோ டி ஒலிவேரா தெரிவித்து இருக்கிறார்.

புதிய துணை வேரியண்ட்கள் பாதிப்பு எப்படி இருக்கும்?

புதிய ஒமிக்ரான் BA. 4 மற்றும் BA. 5 துணை வேரியண்ட்கள் பற்றி தற்போதைக்கு கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை இந்த இருவித தொற்றுக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளோ, அதிக பாதிப்புகளோ தென் ஆப்ரிக்காவில் பதிவாகவில்லை என துலியோ டி ஒலிவேரா தெரிவித்து இருக்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios