2,50000 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்..!! உலக மக்களுக்கு பிறந்தது புதிய நம்பிக்கை..!!
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஸ்பெயின் மக்களின் வாழ்க்கை ஆபத்தான கட்டத்தில் உள்ளது . ஏனெனில் ஐரோப்பா கண்டத்திலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் மாறிவருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மீண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . உலகமே கொரோனா வைரஸை பீதியில் உறைந்துள்ள நிலையில் அந்த வைரஸிலிருந்து இரண்டரை லட்சம் பேர் குணமடைந்திருப்பது மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது . சுமார் 150க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்கா , இத்தாலி , ஸ்பெயின் , ஈரான் , தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதித்துள்ளன . இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இத்தாலியில் இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது . இதுவரை அமெரிக்காவில் மட்டும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை கடந்துள்ளது .
வைரஸ் பரவலின் மையம் என அமெரிக்காவை உலக நாடுகளில் உச்சரித்து வருகின்றனர். அந்த அளவிற்கு அமெரிக்காவில் காட்டுத்தீயாக மக்கள் மத்தியில் வைரஸ் பரவி வருகிறது . இதனால் வல்லரசு நாடான அமெரிக்கா செய்வது அறியாது திகைத்து வருகிறது . கிட்டத்தட்ட உலக அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்நிலையில் வைரஸ் தாக்கம் குறித்து உலக அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஜான் ஹாப்கின்ஸ் மையம் , கொரோனா வைரசின் நிலவரம் குறித்து தகவல்களை ஆராய்ந்து வெளியிட்டு வருகிறது , இந்நிலையில் இந்த வைரஸ் குறித்து வேகமாக பாதிக்கப்பட்டு வரும் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் கூறுகையில் , கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஸ்பெயின் மக்களின் வாழ்க்கை ஆபத்தான கட்டத்தில் உள்ளது . ஏனெனில் ஐரோப்பா கண்டத்திலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் மாறிவருகிறது.
ஆனாலும் இந்த வைரஸ் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை கடுமையாக தாக்குகிறது ஆனால் பலர் லேசான நோய் அறிகுறிகளுடன் அதிலிருந்து மீண்டு வந்து விடுகின்றனர். என தெரிவித்துள்ளார் . இந்நிலையில் உலக அளவில் இந்த வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது , கடந்த ஞாயிற்றுக்கிழமை இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.2 மில்லியனாக இருந்தது . இறந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது மொத்தத்தில் இந்த வைரஸில் இருந்து இதுவரை இரண்டரை லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என அது தெரிவித்துள்ளது . உலக அளவில் எடுக்கப்பட்டுள்ள சமூக விலகல் மற்றும் முழு அடைப்பு நடவடிக்கைகள் அதன் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.