ஈராக் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள 19 எண்ணெய் கிணறுகளுக்கு, ஐஎஸ் தீவிரவாதிகள் தீவைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரை கைப்பற்றுவதில், ஈராக் ராணுவம் தீவிரமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் குர்து படையினரின் ஆதரவுடன் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போர் கடுமையாக இருப்பதால் தாக்கு பிடிக்க முடியாமல் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் மொசூலின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் ராணுவம் வசம் வந்துள்ளது.

இந்நிலையில், ஈராக்கின் மொசூல் நகருக்கு தெற்கில் உள்ள வட்டாரத்தில் இருந்து பின்வாங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்குள்ள 19 எண்ணெய் கிணறுகளுக்குத் தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மக்கள் பலர் சுவாச பிரச்சனை ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமான கால்நடைகள், விலங்குகள் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

எரியும் எண்ணெய் கிணறுகளில் இருந்து வெளியாகும் புகையால் கால்நடைகள் கறுப்பு நிறமாக காட்சியளிப்பதாகக் கூறப்பட்டது.